• Nov 28 2024

இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு..!

Sharmi / Jul 27th 2024, 8:17 am
image

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஜூலை 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மில்லியனை (1,095,675) தாண்டியுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இந்த நிலைமை தொடர்ந்தும் பேணப்பட்டால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்சநிலையை பதிவு செய்த 2018 ஆம் ஆண்டின் மட்டத்தை விஞ்சலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏழு இலட்சம் (719,978) ஐத் தாண்டியது, மேலும் 2023 இல் அது இரு மடங்காக பதினான்கு இலட்சமாக (1 487,303) அதிகரித்துள்ளது.

இதன்படி, கடந்த இரண்டு வருடங்களை விட இந்த வருட இறுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சு கணித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் 23 இலட்சத்திற்கும் அதிகமான (2,333,796) மக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாவின் உச்சத்தை எட்டியுள்ளது.

இதன் விளைவாக, அந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் மட்டும் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்நாட்டு அரசு சாதனை படைக்க  முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஜூலை 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மில்லியனை (1,095,675) தாண்டியுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதன்படி, இந்த நிலைமை தொடர்ந்தும் பேணப்பட்டால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்சநிலையை பதிவு செய்த 2018 ஆம் ஆண்டின் மட்டத்தை விஞ்சலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.2022 ஆம் ஆண்டில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏழு இலட்சம் (719,978) ஐத் தாண்டியது, மேலும் 2023 இல் அது இரு மடங்காக பதினான்கு இலட்சமாக (1 487,303) அதிகரித்துள்ளது.இதன்படி, கடந்த இரண்டு வருடங்களை விட இந்த வருட இறுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சு கணித்துள்ளது.2018 ஆம் ஆண்டில் 23 இலட்சத்திற்கும் அதிகமான (2,333,796) மக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாவின் உச்சத்தை எட்டியுள்ளது.இதன் விளைவாக, அந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் மட்டும் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்நாட்டு அரசு சாதனை படைக்க  முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement