• Dec 19 2024

வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு - கிடைத்தது அனுமதி!

Chithra / Dec 19th 2024, 12:43 pm
image


அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறப்பு வைத்திய அலுவலர்கள், தர வைத்திய அலுவலர்கள், சிறப்பு பல் வைத்திய அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, வைத்தியர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆக குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு - கிடைத்தது அனுமதி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, சிறப்பு வைத்திய அலுவலர்கள், தர வைத்திய அலுவலர்கள், சிறப்பு பல் வைத்திய அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.முன்னதாக, வைத்தியர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆக குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement