• Nov 26 2024

அதிகரித்த உர மானியம்: நெல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Chithra / Aug 27th 2024, 10:22 am
image

 

நாட்டில் உள்ள நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த போகத்தில் இருந்து உர மானியத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர  தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (26) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று முதல் நெல் கொள்வனவுகளை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாக மகாபண்டார 500 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 115 ரூபாவிற்கும், கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த உர மானியம்: நெல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு  நாட்டில் உள்ள நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த போகத்தில் இருந்து உர மானியத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர  தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (26) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இன்று முதல் நெல் கொள்வனவுகளை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.அதன் ஆரம்ப கட்டமாக மகாபண்டார 500 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 115 ரூபாவிற்கும், கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement