• Jan 24 2025

பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரிப்பு !

Tharmini / Nov 19th 2024, 10:38 am
image

பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. 

இதனால், மக்களுக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

கடந்த மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

காற்று மாசுபாட்டால் குழந்தைகளும், வயதானவர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிற நிலையில், 

பாடசாலைகளுக்கு விடுமுறை அளித்தல், வாகனப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுவருகிறது.

பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரிப்பு பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்களுக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.காற்று மாசுபாட்டால் குழந்தைகளும், வயதானவர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிற நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை அளித்தல், வாகனப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement