• Mar 16 2025

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

Chithra / Mar 15th 2025, 4:42 pm
image

 

நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000 ஃபுரோஸ்மைடு ஊசிகள்  இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்ஷாவினால் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலின் ஜயதிஸ்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியா மற்றும் இலங்கை இடையே காணப்படும் நீண்டகால நட்பை நினைவுபடுத்தும் விதமாக இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இடையே இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்நன்கொடை வழங்கப்பட்டது.

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சினுள் எதிர்காலத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது, 

மேலும் தற்போது நடைபெற்று வரும் பல திட்டங்கள் மற்றும் திட்டங்களின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த தகவல்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

எதிர்காலத்தில் நாடு முழுவதையும் உள்ளடக்கிய ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவுவதன் மூலம் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் விசேட பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 50,000 தடுப்பூசிகள் நன்கொடை  நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000 ஃபுரோஸ்மைடு ஊசிகள்  இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்ஷாவினால் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலின் ஜயதிஸ்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்தியா மற்றும் இலங்கை இடையே காணப்படும் நீண்டகால நட்பை நினைவுபடுத்தும் விதமாக இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இடையே இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்நன்கொடை வழங்கப்பட்டது.சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சினுள் எதிர்காலத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது, மேலும் தற்போது நடைபெற்று வரும் பல திட்டங்கள் மற்றும் திட்டங்களின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த தகவல்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டன.எதிர்காலத்தில் நாடு முழுவதையும் உள்ளடக்கிய ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவுவதன் மூலம் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் விசேட பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement