பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது
இந்தியாவின் ஜம்மு காஸ்மீரில் மேற்கொண்டிருந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எனவும் இன்று புதன்கிழமை விவரங்கள் வெளியிடப்படும் என்று இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் உரிய நேரத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
அதாவது
"ஒட்டுமொத்த தேசமும் அதன் ஆயுதப் படைகளுக்குப் பின்னால் ஒன்றுபட்டு நிற்கிறது, எங்கள் மன உறுதியும் அசைக்கப்படாமல் உள்ளன. பாகிஸ்தான் மக்களும் அதன் படைகளும் எங்கள் வலிமை மற்றும் உறுதியுடன் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவும் தோற்கடிக்கவும் முழுமையாகத் தயாராக உள்ளனர் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்
மேலும் கோட்லி,பஹாவல்பூர் முரிட்கே பாக் மற்றும் முசாபாரத் ஆகிய இடங்களில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி யாக பாகிஸ்தான் இராணுவம் இரண்டு இந்திய ஜெட் விமானங்களை வீழ்மத்தியதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இதேவேளை குறித்த ஏவுகனை தாக்குதலில் 1 குழந்தை 2 பெண் மற்றும் 5 ஆண்கள் கொல்லப்பட்டதுடன் 31 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் இராணுவம்தெரிவித்துள்ளது
மேலும் பதில் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தாரார் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்திய இந்தியா; உரிய நேரத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதுஇந்தியாவின் ஜம்மு காஸ்மீரில் மேற்கொண்டிருந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எனவும் இன்று புதன்கிழமை விவரங்கள் வெளியிடப்படும் என்று இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.மேலும் உரிய நேரத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதாவது"ஒட்டுமொத்த தேசமும் அதன் ஆயுதப் படைகளுக்குப் பின்னால் ஒன்றுபட்டு நிற்கிறது, எங்கள் மன உறுதியும் அசைக்கப்படாமல் உள்ளன. பாகிஸ்தான் மக்களும் அதன் படைகளும் எங்கள் வலிமை மற்றும் உறுதியுடன் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவும் தோற்கடிக்கவும் முழுமையாகத் தயாராக உள்ளனர் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்மேலும் கோட்லி,பஹாவல்பூர் முரிட்கே பாக் மற்றும் முசாபாரத் ஆகிய இடங்களில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி யாக பாகிஸ்தான் இராணுவம் இரண்டு இந்திய ஜெட் விமானங்களை வீழ்மத்தியதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇதேவேளை குறித்த ஏவுகனை தாக்குதலில் 1 குழந்தை 2 பெண் மற்றும் 5 ஆண்கள் கொல்லப்பட்டதுடன் 31 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் இராணுவம்தெரிவித்துள்ளதுமேலும் பதில் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தாரார் உறுதிப்படுத்தியுள்ளார்.