• Nov 23 2024

குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மையில் பிரச்சினைக்குள்ளாகும் மாலைதீவு- உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

Tamil nila / Aug 11th 2024, 7:25 am
image

இந்திய அரசானது, குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மையில் மாலைதீவு  நாட்டிற்கு உதவியளிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையில் அண்மைய சில காலமாக விரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா துறை பெரிதும் பாதிப்படைந்து பொருளாதார ரீதியாக பெரும் விளைவுகளை மாலைதீவு எதிர்நோக்கியுள்ளது.

மாலைதீவின் 28 தீவுகளில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டங்களுக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

குறிப்பாக கடந்த 2014-ல் மாலைதீவு குடிநீர் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தின் போது கடுமையான குடிநீர் பஞ்சம் நாட்டில் ஏற்பட்டது.

மாலைதீவின் கோரிக்கைக்கிணங்க பல தவணைகளாக இந்தியா மாலைதீவுக்கு குடிநீர் அனுப்பியது.

அத்துடன் அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலைததீவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மையில் பிரச்சினைக்குள்ளாகும் மாலைதீவு- உதவிக்கரம் நீட்டும் இந்தியா இந்திய அரசானது, குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மையில் மாலைதீவு  நாட்டிற்கு உதவியளிப்பதாக தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையில் அண்மைய சில காலமாக விரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா துறை பெரிதும் பாதிப்படைந்து பொருளாதார ரீதியாக பெரும் விளைவுகளை மாலைதீவு எதிர்நோக்கியுள்ளது.மாலைதீவின் 28 தீவுகளில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டங்களுக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.குறிப்பாக கடந்த 2014-ல் மாலைதீவு குடிநீர் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தின் போது கடுமையான குடிநீர் பஞ்சம் நாட்டில் ஏற்பட்டது.மாலைதீவின் கோரிக்கைக்கிணங்க பல தவணைகளாக இந்தியா மாலைதீவுக்கு குடிநீர் அனுப்பியது.அத்துடன் அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலைததீவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement