• Jan 16 2025

பொலிஸ் வாகன கொள்வனவு - இலங்கைக்கு இந்தியா மானியம்!

Chithra / Jan 16th 2025, 11:13 am
image

 

 

நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு கெப் ரக வாகனங்களை வழங்குவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதற்காக இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.

இந்த திட்டத்தின்கீழ், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு குறைந்தது 80 கெப் ரக வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் வழங்கப்படவுள்ளன.

இது பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் தொடர்பான இலங்கை பொலிஸின் முக்கிய தேவையை நிவர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


பொலிஸ் வாகன கொள்வனவு - இலங்கைக்கு இந்தியா மானியம்   நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு கெப் ரக வாகனங்களை வழங்குவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இதற்காக இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.இந்த திட்டத்தின்கீழ், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு குறைந்தது 80 கெப் ரக வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் வழங்கப்படவுள்ளன.இது பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் தொடர்பான இலங்கை பொலிஸின் முக்கிய தேவையை நிவர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement