• May 17 2024

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிநவீன ட்ரோன்களை வாங்க முடிவு! samugammedia

Tamil nila / Jun 20th 2023, 8:00 am
image

Advertisement

இந்தியா-அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் டாலர் (ரூ.24,500 கோடி) மதிப்பில் 31 அதிநவீன ஆயுதமேந்திய எம்க்யூ- 9பி ட்ரோன்களை வாங்க கடந்த வாரம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

எனவே இது  இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அமெரிக்கா முதற்கட்டமாக இந்தியாவுக்கு ஆயுதமில்லாமல் 10 ட்ரோன்கள் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 மே மாதம் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டது. 

அதைத் தொடர்ந்து இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா அதன் ராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது. எல்லை தொடர்பாக இன்னும் இரு நாடுகளிடையே மோதல் தொடர்ந்தபடி உள்ளது.

இந்நிலையில், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தன்னுடைய ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தத் தொடங்கியுள்ளது.   கடற்பரப்பு, வான்பரப்பு, நிலப்பரப்பு என அனைத்துத் தளங்களிலும் பாதுகாப்பு அம்சங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து எம்க்யூ - 9 பி எனும் அதிநவீன ட்ரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 3 பில்லியன் டாலர் மதிப்பில் 31 எம்க்யூ - 9 பி ட்ரோன்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிநவீன ட்ரோன்களை வாங்க முடிவு samugammedia இந்தியா-அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் டாலர் (ரூ.24,500 கோடி) மதிப்பில் 31 அதிநவீன ஆயுதமேந்திய எம்க்யூ- 9பி ட்ரோன்களை வாங்க கடந்த வாரம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.எனவே இது  இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா முதற்கட்டமாக இந்தியாவுக்கு ஆயுதமில்லாமல் 10 ட்ரோன்கள் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2020 மே மாதம் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா அதன் ராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது. எல்லை தொடர்பாக இன்னும் இரு நாடுகளிடையே மோதல் தொடர்ந்தபடி உள்ளது.இந்நிலையில், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தன்னுடைய ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தத் தொடங்கியுள்ளது.   கடற்பரப்பு, வான்பரப்பு, நிலப்பரப்பு என அனைத்துத் தளங்களிலும் பாதுகாப்பு அம்சங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து எம்க்யூ - 9 பி எனும் அதிநவீன ட்ரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 3 பில்லியன் டாலர் மதிப்பில் 31 எம்க்யூ - 9 பி ட்ரோன்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement