• Nov 26 2024

அண்டை நாடுகளுக்கு ஆற்றல் தரும் இந்தியா: சர்வமத மதஸ்தலங்களுக்கு இலவச சூரிய மின்கலம்!

Chithra / Oct 28th 2024, 9:27 am
image


 

அண்டை நாடுகளுக்கான ஆற்றல் கூட்டாண்மையின் தொடர்ச்சியாக, இலங்கையில்  உள்ள மத இடங்களுக்கு சூரிய ஒளி கூரை அமைப்புகளை இந்தியா  கையளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வுகளில் இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள நான்கு முக்கிய மத இடங்களுக்கு சூரிய சக்தி கூரை அமைப்புகள் மற்றும் பிற பொருட்களை கையளித்துள்ளனர்.

ஹோக்கந்தரையில்   அமைந்துள்ள பௌத்த ஆலயம் உட்பட்ட நான்கு ஆலயங்கள் இதில் அடங்குகின்றன.

இலங்கை முழுவதிலும் உள்ள 5,000 மத நிறுவனங்களுக்கு சூரிய கூரை அமைப்புகளை நிறுவுவதற்கான 17 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 25 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதையும், ஆண்டுதோறும் சுமார் 37 மில்லியன் அலகுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  

அண்டை நாடுகளுக்கு ஆற்றல் தரும் இந்தியா: சர்வமத மதஸ்தலங்களுக்கு இலவச சூரிய மின்கலம்  அண்டை நாடுகளுக்கான ஆற்றல் கூட்டாண்மையின் தொடர்ச்சியாக, இலங்கையில்  உள்ள மத இடங்களுக்கு சூரிய ஒளி கூரை அமைப்புகளை இந்தியா  கையளித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வுகளில் இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள நான்கு முக்கிய மத இடங்களுக்கு சூரிய சக்தி கூரை அமைப்புகள் மற்றும் பிற பொருட்களை கையளித்துள்ளனர்.ஹோக்கந்தரையில்   அமைந்துள்ள பௌத்த ஆலயம் உட்பட்ட நான்கு ஆலயங்கள் இதில் அடங்குகின்றன.இலங்கை முழுவதிலும் உள்ள 5,000 மத நிறுவனங்களுக்கு சூரிய கூரை அமைப்புகளை நிறுவுவதற்கான 17 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் 25 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதையும், ஆண்டுதோறும் சுமார் 37 மில்லியன் அலகுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement