• May 17 2024

அமெரிக்க டொலருக்கு பதிலாக இந்திய ரூபா அறிமுகம்!

Tamil nila / Dec 16th 2022, 9:14 pm
image

Advertisement

இந்திய ரூபாவில் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்காக ரஷ்யாவுக்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளையும் இலங்கைக்காக 5 கணக்குகளையும் மொறிசியஸ் நாட்டுக்காக ஒரு கணக்கையும் திறக்க இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.


இந்த தீர்மானத்திற்கு அமைய சர்வதேச கொடுக்கல், வாங்கல்களின் போது அமெரிக்க டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்த சந்தர்ப்பம், ரஷ்யா, இலங்கை மற்றும் மொறிசியஸ் நாடுகளுக்கு கிடைக்கும்.


வெளிநாட்டு அந்நிய செலாவணி பற்றாக்குறையாக இருக்கும் நாடுகளுக்கு இந்த முறைமையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


மேலும் சூடான், லக்ஷ்சம்பேர்க்,கியூபா, தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த நிதி பரிமாற்றல் முறைக்கு விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.



எனினும் இந்த நான்கு நாடுகளுக்கு இந்திய மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்த தகவல்கல் கூறுகின்றன.


அமெரிக்க டொலருக்கு பதிலாக இந்திய ரூபா அறிமுகம் இந்திய ரூபாவில் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்காக ரஷ்யாவுக்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளையும் இலங்கைக்காக 5 கணக்குகளையும் மொறிசியஸ் நாட்டுக்காக ஒரு கணக்கையும் திறக்க இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.இந்த தீர்மானத்திற்கு அமைய சர்வதேச கொடுக்கல், வாங்கல்களின் போது அமெரிக்க டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்த சந்தர்ப்பம், ரஷ்யா, இலங்கை மற்றும் மொறிசியஸ் நாடுகளுக்கு கிடைக்கும்.வெளிநாட்டு அந்நிய செலாவணி பற்றாக்குறையாக இருக்கும் நாடுகளுக்கு இந்த முறைமையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.மேலும் சூடான், லக்ஷ்சம்பேர்க்,கியூபா, தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த நிதி பரிமாற்றல் முறைக்கு விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.எனினும் இந்த நான்கு நாடுகளுக்கு இந்திய மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்த தகவல்கல் கூறுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement