• Apr 25 2024

இலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில் அறிவிப்பு! samugammedia

Chithra / May 30th 2023, 4:33 pm
image

Advertisement

BIMSTEC புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் இந்தியாவிலுள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் கீழ்வரும் கற்கைநெறிகளைத் தொடர்வதற்காக இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

• வரலாற்று கற்கைகளில் MA மற்றும் PhD • பௌத்த கற்கைகள், தத்துவம் மற்றும் மத ஒப்பீட்டு கற்கைகளில் MA மற்றும் PhD

• இந்து கற்கைகளில் (சனாதன தர்மம்) MA மற்றும் PhD

• சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கற்கைகளில் MSc மற்றும் PhD

• நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்தில் MBA

• உலக இலக்கியம் (ஆங்கிலம்) MA மற்றும் PhD

இப்புலமைப்பரிசில் திட்டமானது அனுமதிக் கட்டணம், இக்கற்கை நெறிக்கான கல்விக்கட்டணம், வதிவிட செலவுகள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு ஆகியவற்றுடன் ஒரு தடவைக்கான இருவழி பயணக் கொடுப்பனவையும் உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டம் குறித்த மேலதிக தகவல்களை https://nalandauniv.edu.in/admissions/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது foreignstudents@nalandauniv.edu.in.  என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் பெறமுடியும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 2023 ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னதாக (https://nalandauniv.edu.in/admissions/) இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில் அறிவிப்பு samugammedia BIMSTEC புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் இந்தியாவிலுள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் கீழ்வரும் கற்கைநெறிகளைத் தொடர்வதற்காக இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.• வரலாற்று கற்கைகளில் MA மற்றும் PhD • பௌத்த கற்கைகள், தத்துவம் மற்றும் மத ஒப்பீட்டு கற்கைகளில் MA மற்றும் PhD• இந்து கற்கைகளில் (சனாதன தர்மம்) MA மற்றும் PhD• சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கற்கைகளில் MSc மற்றும் PhD• நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்தில் MBA• உலக இலக்கியம் (ஆங்கிலம்) MA மற்றும் PhDஇப்புலமைப்பரிசில் திட்டமானது அனுமதிக் கட்டணம், இக்கற்கை நெறிக்கான கல்விக்கட்டணம், வதிவிட செலவுகள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு ஆகியவற்றுடன் ஒரு தடவைக்கான இருவழி பயணக் கொடுப்பனவையும் உள்ளடக்கியுள்ளது.இத்திட்டம் குறித்த மேலதிக தகவல்களை https://nalandauniv.edu.in/admissions/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது foreignstudents@nalandauniv.edu.in.  என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் பெறமுடியும்.விண்ணப்பிக்க விரும்புவோர் 2023 ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னதாக (https://nalandauniv.edu.in/admissions/) இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement