• May 02 2024

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - இலங்கைக்கு அச்சுறுத்தலா? - எச்சரிக்கை

Chithra / Jan 10th 2023, 6:51 am
image

Advertisement

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.


இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தனிம்பார் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூமிக்கு அடியில் 97 கிலோமீட்டர் (60.27 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


ஊவா மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - இலங்கைக்கு அச்சுறுத்தலா - எச்சரிக்கை இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவின் தனிம்பார் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பூமிக்கு அடியில் 97 கிலோமீட்டர் (60.27 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஊவா மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Advertisement

Advertisement

Advertisement