• Nov 24 2024

கட்சியின் தலைவர்களை முதலில் அறிவியுங்கள்: பின்னர் எம்மை விமர்சிக்கலாம் - எமில்காந்தன் சவால்

Tharmini / Oct 24th 2024, 4:07 pm
image

தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியும் தங்களது தலைவர்கள் யார் என்பதை ஒருகிழமைக்குள் அறிவிக்க வேண்டும். 

அதன்பிறகு சுயேட்சைகுழுக்களையும் ஏனைய அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கலாம் என்று வன்னிமாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழு 7 இன் தலைமை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். நாங்கள் புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்காககட்சியினை ஆரம்பித்து பதிவுசெய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்க விருந்தநிலையில் விரைவாக ஒரு தேர்தல் வந்தமையால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடவேண்டிய நிலை ஏற்ப்பட்டது. இது தீடிர் என்றுஉருவாக்கப்பட்ட ஒரு அணி அல்ல. 

அந்தவகையில் மன்னார் மாவட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் சுயேட்சைகுழுக்கள் எல்லாம் மாரிகாலத்தில் கத்தும் தவளைகள் என்றும் வாக்குகளை உடைத்து பிரதிநிதித்துவத்தை குறைப்பதுவுமே அவர்களது நோக்கம் என்றும் கூறுகின்றார். 

அவர் ஒன்றை மறந்துவிட்டார். அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சியில் தற்போது தலைவர் யார் என்பதை அவர் எமக்கு முன்னிலைப்படுத்தி அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். எனது தலைமையிலான சுயேட்சைக்குழுவுடன் பகிரங்க விவாதத்திற்கு அவரது கட்சியின் தலைமையோடு வருமாறு நான் அழைப்புவிடுக்கின்றேன். கட்சிக்கே ஒருதலைவரை அறிமுகப்படுத்தமுடியாத வேட்பாளர்கள் சுயேட்சைகுழுக்களை பற்றிவிமர்சிக்கின்றனர்.

அதேபோல தாங்கள் மட்டும் தான் உரிமை அரசியலைப்பற்றி கதைக்கிறோம் ஏனைய அனைவரும் இலங்கையில் இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்ற பிரச்சாரத்துக்கு வலுச்சேர்ப்பவர்களாம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஒரு இனம் தன்னை நிலைநிறுத்தவேண்டும் என்றால் பொருளாதார அபிவிருத்தியையும் தண்ணிறைவையும் கொண்டிருக்க வேண்டும். அது இருந்தால் அந்த இனம் உரிமையில் வெல்லமுடியும். இது இரண்டும் ஒரே கோட்டில் பயணிக்கவேண்டிய விடயம். 

கடந்தகாலங்களில் உரிமை அரசியலைபற்றி பேசிய இவர்கள் எல்லாம் அதன் விளைவு பற்றியும் நடந்துமுடிந்தது என்ன என்பது பற்றியும் பதிலளிக்கவேண்டும். எமது சுயேட்சைகுழுவின் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்து விடயங்களும் நடந்தால் உரிமை அரசியலை மக்கள்  தானாகவே பெற்றுக்கொள்ளமுடியும். 

சிவசக்தி ஆனந்தனிடம் கேட்கிறேன் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் தலைவர் யார் என்று கூறுங்கள். இந்த சுயேட்சை குழுவிற்கு நான் தலைமைதாங்குகின்றேன். உங்களது தலைமை யார் என்று ஒரு கிழமைக்குள் அறிவியுங்கள்.

தலைவர்களையே நியமிக்க முடியாத நீங்கள் அரசாங்கத்திடமோ சர்வதேசத்திடமோ சென்று  இனப்பிரச்சனையை எப்படித்தீர்க்கப்போகிறீர்கள். நாம் ஏனைய கட்சிகளை விமர்சித்து அரசியல் செய்யவரவில்லை.

ஆனால் எமது மக்கள் நொந்துபோயுள்ளனர். வன்னியில் குடிதண்ணிஇன்றி அதிகமான மக்கள் துன்பப்படுகின்றனர். கடந்தகாலங்களில் ஒன்றாக இருந்த தமிழரசுக்கட்சி, ஜனநாயகதமிழ்கூட்டணி ஆகிய நீங்கள்இதற்கு என்ன விடை கண்டீர்கள். எனவே மக்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது. வாக்கை பெறுவதற்காக மக்களை பிழையாக வழிநடாத்தவேண்டாம்.

அன்று மக்கள் பொருளாதாரத்தில் நிறைவுகண்டிருந்தார்கள் அதனால் இந்த அரசியல்கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் ஊக்கம்கொடுத்து அவற்றை வளர்க்கமுடிந்தது. எனவே எமது உரிமையை நாம் அடைவதற்கு பொருளாதார தண்ணிறைவை காணவேண்டும். இல்லாவிடில் அந்த இலக்கை அடையமுடியாது. 

எனவே தயவுசெய்து மக்களை பிழையாக வழிநடாத்தாதீர்கள் மக்களை முன்னேற்றுங்கள் உங்களால் செய்ய முடியாவிடில் ஏனையவர்களுக்கு வழிவிடுங்கள். காழ்ப்புணர்ச்சியில் செயற்ப்படவேண்டாம் என்றார்.

கட்சியின் தலைவர்களை முதலில் அறிவியுங்கள்: பின்னர் எம்மை விமர்சிக்கலாம் - எமில்காந்தன் சவால் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியும் தங்களது தலைவர்கள் யார் என்பதை ஒருகிழமைக்குள் அறிவிக்க வேண்டும். அதன்பிறகு சுயேட்சைகுழுக்களையும் ஏனைய அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கலாம் என்று வன்னிமாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழு 7 இன் தலைமை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார்.வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். நாங்கள் புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்காககட்சியினை ஆரம்பித்து பதிவுசெய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்க விருந்தநிலையில் விரைவாக ஒரு தேர்தல் வந்தமையால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடவேண்டிய நிலை ஏற்ப்பட்டது. இது தீடிர் என்றுஉருவாக்கப்பட்ட ஒரு அணி அல்ல. அந்தவகையில் மன்னார் மாவட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் சுயேட்சைகுழுக்கள் எல்லாம் மாரிகாலத்தில் கத்தும் தவளைகள் என்றும் வாக்குகளை உடைத்து பிரதிநிதித்துவத்தை குறைப்பதுவுமே அவர்களது நோக்கம் என்றும் கூறுகின்றார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சியில் தற்போது தலைவர் யார் என்பதை அவர் எமக்கு முன்னிலைப்படுத்தி அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். எனது தலைமையிலான சுயேட்சைக்குழுவுடன் பகிரங்க விவாதத்திற்கு அவரது கட்சியின் தலைமையோடு வருமாறு நான் அழைப்புவிடுக்கின்றேன். கட்சிக்கே ஒருதலைவரை அறிமுகப்படுத்தமுடியாத வேட்பாளர்கள் சுயேட்சைகுழுக்களை பற்றிவிமர்சிக்கின்றனர்.அதேபோல தாங்கள் மட்டும் தான் உரிமை அரசியலைப்பற்றி கதைக்கிறோம் ஏனைய அனைவரும் இலங்கையில் இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்ற பிரச்சாரத்துக்கு வலுச்சேர்ப்பவர்களாம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.ஒரு இனம் தன்னை நிலைநிறுத்தவேண்டும் என்றால் பொருளாதார அபிவிருத்தியையும் தண்ணிறைவையும் கொண்டிருக்க வேண்டும். அது இருந்தால் அந்த இனம் உரிமையில் வெல்லமுடியும். இது இரண்டும் ஒரே கோட்டில் பயணிக்கவேண்டிய விடயம். கடந்தகாலங்களில் உரிமை அரசியலைபற்றி பேசிய இவர்கள் எல்லாம் அதன் விளைவு பற்றியும் நடந்துமுடிந்தது என்ன என்பது பற்றியும் பதிலளிக்கவேண்டும். எமது சுயேட்சைகுழுவின் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்து விடயங்களும் நடந்தால் உரிமை அரசியலை மக்கள்  தானாகவே பெற்றுக்கொள்ளமுடியும். சிவசக்தி ஆனந்தனிடம் கேட்கிறேன் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் தலைவர் யார் என்று கூறுங்கள். இந்த சுயேட்சை குழுவிற்கு நான் தலைமைதாங்குகின்றேன். உங்களது தலைமை யார் என்று ஒரு கிழமைக்குள் அறிவியுங்கள்.தலைவர்களையே நியமிக்க முடியாத நீங்கள் அரசாங்கத்திடமோ சர்வதேசத்திடமோ சென்று  இனப்பிரச்சனையை எப்படித்தீர்க்கப்போகிறீர்கள். நாம் ஏனைய கட்சிகளை விமர்சித்து அரசியல் செய்யவரவில்லை. ஆனால் எமது மக்கள் நொந்துபோயுள்ளனர். வன்னியில் குடிதண்ணிஇன்றி அதிகமான மக்கள் துன்பப்படுகின்றனர். கடந்தகாலங்களில் ஒன்றாக இருந்த தமிழரசுக்கட்சி, ஜனநாயகதமிழ்கூட்டணி ஆகிய நீங்கள்இதற்கு என்ன விடை கண்டீர்கள். எனவே மக்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது. வாக்கை பெறுவதற்காக மக்களை பிழையாக வழிநடாத்தவேண்டாம்.அன்று மக்கள் பொருளாதாரத்தில் நிறைவுகண்டிருந்தார்கள் அதனால் இந்த அரசியல்கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் ஊக்கம்கொடுத்து அவற்றை வளர்க்கமுடிந்தது. எனவே எமது உரிமையை நாம் அடைவதற்கு பொருளாதார தண்ணிறைவை காணவேண்டும். இல்லாவிடில் அந்த இலக்கை அடையமுடியாது. எனவே தயவுசெய்து மக்களை பிழையாக வழிநடாத்தாதீர்கள் மக்களை முன்னேற்றுங்கள் உங்களால் செய்ய முடியாவிடில் ஏனையவர்களுக்கு வழிவிடுங்கள். காழ்ப்புணர்ச்சியில் செயற்ப்படவேண்டாம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement