• Feb 20 2025

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்..!

Chithra / Feb 18th 2025, 8:04 am
image


ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்தது போதுமானதல்ல என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். 

இன்று முதல் அமுலாகும் வகையில் ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளன.  

கோதுமை மா கிலோவொன்று சந்தைகளில் தற்போது 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

10 ரூபா விலை குறைப்பு மூலம் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க வேண்டுமானால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல். ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்தது போதுமானதல்ல என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும் வகையில் ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளன.  கோதுமை மா கிலோவொன்று சந்தைகளில் தற்போது 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 10 ரூபா விலை குறைப்பு மூலம் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க வேண்டுமானால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement