இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாறை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தின் போது மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரி.வினோதராசாவின் அடக்குமுறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதிப் பணிப்பாளர் ரி. வினோதராசாவின் நிர்வாக முறைமையில் அதிருப்தி அடைந்த சகல உத்தியோகத்தர்களும் அவரை உடனடியாக இடம் மாற்றக் கோரி இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை ஒருங்கிணைந்த சுதந்திர தொழிற்சங்க செயலாளர் நிஹால் விதானகேவின் வழிகாட்டுதலில் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், இப்பிரதிப் பணிப்பாளர், அவரின் கடந்த சேவைக்காலங்களில் பல தண்டனை மற்றும் இடம்மாற்றங்களை பெற்றிருப்பதோடு பலதரப்பட்ட நிர்வாக முறைமை மற்றும் நிதி தொடர்பான குற்றங்களுக்காகவும் இடம் மாற்றங்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் தொழிற்பயிற்சி அதிகார சபை பிரதிப் பணிப்பாளருக்கு எதிராக போராட்டம் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாறை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தின் போது மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரி.வினோதராசாவின் அடக்குமுறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, பிரதிப் பணிப்பாளர் ரி. வினோதராசாவின் நிர்வாக முறைமையில் அதிருப்தி அடைந்த சகல உத்தியோகத்தர்களும் அவரை உடனடியாக இடம் மாற்றக் கோரி இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை ஒருங்கிணைந்த சுதந்திர தொழிற்சங்க செயலாளர் நிஹால் விதானகேவின் வழிகாட்டுதலில் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.மேலும், இப்பிரதிப் பணிப்பாளர், அவரின் கடந்த சேவைக்காலங்களில் பல தண்டனை மற்றும் இடம்மாற்றங்களை பெற்றிருப்பதோடு பலதரப்பட்ட நிர்வாக முறைமை மற்றும் நிதி தொடர்பான குற்றங்களுக்காகவும் இடம் மாற்றங்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.