• Feb 20 2025

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

Chithra / Feb 18th 2025, 8:19 am
image

 

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் கலீலுடன் மாலைத்தீவுகளின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனாயாவும் வருகைதரவுள்ளார்.

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்  மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இவ்விஜயத்தின் போது, மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.வெளியுறவு அமைச்சர் கலீலுடன் மாலைத்தீவுகளின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனாயாவும் வருகைதரவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement