• Feb 20 2025

ரணில் மற்றும் சஜித் அணிகளிலுள்ள மூன்று சகுனிகள்; இணைவு சாத்தியமற்றது - ஆஷூ மாரசிங்க பகிரங்கம்

Chithra / Feb 18th 2025, 8:28 am
image


நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவு சாத்தியமற்றதாகும். எனவே இந்த கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இனியும் தொடரும் என்று நாம் நம்பவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி சாத்தியமற்ற போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது. 

இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் உண்மையான தேவைப்பாடு காணப்பட்டால் இருவரும் நேரடியாக இதில் தலையிட வேண்டும். ஆனால் இரு தரப்பிலுமே அவ்வாறானதொரு நிலைமையை அவதானிக்க முடியவில்லை.

ரணில் மற்றும் சஜித் அணிகளிலுள்ள மூன்று சகுனிகள் தான் இந்த வேலைத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.

ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் அவருடன் இவ்வாறானவர்கள் இருக்கவில்லை. அவர் சுயாதீனமாகவே முடிவுகளை எடுத்தார். ஆனால் தற்போதைய இரு தலைவர்களுமே அவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதில்லை.

இணைந்து செயற்படாவிட்டால் இந்த இரு கட்சிகளுக்குமே எதிர்காலம் இல்லை. நாட்டு மக்களுக்காகவும், இளம் தலைமுறையினருக்காகவும் புதிய வேலைத்திட்டமொன்றையாவது நாம் ஆரம்பிப்போம். 

இந்த கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இனியும் தொடரும் என்று நாம் நம்பவில்லை. நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இந்த இணைவு சாத்தியமற்றது  என்றார்.

ரணில் மற்றும் சஜித் அணிகளிலுள்ள மூன்று சகுனிகள்; இணைவு சாத்தியமற்றது - ஆஷூ மாரசிங்க பகிரங்கம் நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவு சாத்தியமற்றதாகும். எனவே இந்த கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இனியும் தொடரும் என்று நாம் நம்பவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி சாத்தியமற்ற போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் உண்மையான தேவைப்பாடு காணப்பட்டால் இருவரும் நேரடியாக இதில் தலையிட வேண்டும். ஆனால் இரு தரப்பிலுமே அவ்வாறானதொரு நிலைமையை அவதானிக்க முடியவில்லை.ரணில் மற்றும் சஜித் அணிகளிலுள்ள மூன்று சகுனிகள் தான் இந்த வேலைத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் அவருடன் இவ்வாறானவர்கள் இருக்கவில்லை. அவர் சுயாதீனமாகவே முடிவுகளை எடுத்தார். ஆனால் தற்போதைய இரு தலைவர்களுமே அவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதில்லை.இணைந்து செயற்படாவிட்டால் இந்த இரு கட்சிகளுக்குமே எதிர்காலம் இல்லை. நாட்டு மக்களுக்காகவும், இளம் தலைமுறையினருக்காகவும் புதிய வேலைத்திட்டமொன்றையாவது நாம் ஆரம்பிப்போம். இந்த கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இனியும் தொடரும் என்று நாம் நம்பவில்லை. நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இந்த இணைவு சாத்தியமற்றது  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement