• May 08 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியோர் தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Mar 6th 2025, 9:28 am
image

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், 19 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 03 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை  ஏற்றுக்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் 8, 9, 13, 15, 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியோர் தொடர்பில் வெளியான தகவல்  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன், 19 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கண்டி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 03 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை  ஏற்றுக்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனினும் எதிர்வரும் 8, 9, 13, 15, 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now