2023/2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கோரியுள்ளது.
அதற்காக உள்நாட்டு வருமான வரி திணைக்களத்தின் அலுவலகங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி திறந்திருக்கும் என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஏ.சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
உரிய திகதிக்குள் வருமான வரி விபரத்திரட்டை சமர்ப்பிக்கும் முறைமையைப் பொருட்படுத்தாமல், கால தாமதமாகச் சமர்ப்பிக்கப்படும் வருமான வரி விபரத் திரட்டுகள் சட்ட நடைமுறைக்கு உட்பட்டவை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபள்யூ.ஏ.சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குறித்த விபரத் திரட்டை சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்படுமாயின் உடனடியாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள தலைமை அலுவலகத்தை நாட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் வருமான வரி திரட்டில் உள்ளடக்கப்பட வேண்டிய விவரங்களைத் துல்லியமாக உள்ளிடுவது மிகவும் முக்கியமானதாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருமான வரி விபரத்திரட்டை கோரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2023/2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கோரியுள்ளது. அதற்காக உள்நாட்டு வருமான வரி திணைக்களத்தின் அலுவலகங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி திறந்திருக்கும் என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஏ.சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். உரிய திகதிக்குள் வருமான வரி விபரத்திரட்டை சமர்ப்பிக்கும் முறைமையைப் பொருட்படுத்தாமல், கால தாமதமாகச் சமர்ப்பிக்கப்படும் வருமான வரி விபரத் திரட்டுகள் சட்ட நடைமுறைக்கு உட்பட்டவை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபள்யூ.ஏ.சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இதனிடையே, குறித்த விபரத் திரட்டை சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்படுமாயின் உடனடியாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள தலைமை அலுவலகத்தை நாட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் வருமான வரி திரட்டில் உள்ளடக்கப்பட வேண்டிய விவரங்களைத் துல்லியமாக உள்ளிடுவது மிகவும் முக்கியமானதாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.