• Mar 15 2025

நாடளாவிய ரீதியில் தொடரும் தீவிர சோதனைகள்; வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை

Chithra / Mar 14th 2025, 1:37 pm
image

 

அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலை மற்றும் மொத்த விலை என்பன மாற்றப்படவில்லை எனவும் கட்டுப்பாட்டு விலை நீக்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

இதற்கமைய, சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220, நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 230, ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 240 மற்றும் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறிப்பிட்ட விலையை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், 

தீவிர சோதனைகள் மற்றும் விசாரணைகள் நாடளாவிய ரீதியில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில சந்தைகளில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைகள் மாற்றப்பட்டுள்ளன என்ற தவறான தகவல்களை சில மொத்த விற்பனையாளர்கள் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் பரப்பி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த போலி பிரசாரங்கள்ன மூலம் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ய முயற்சி செய்வதாகவும், இதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், இம்மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, 1,555 விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தொடரும் தீவிர சோதனைகள்; வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை  அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலை மற்றும் மொத்த விலை என்பன மாற்றப்படவில்லை எனவும் கட்டுப்பாட்டு விலை நீக்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.இதற்கமைய, சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220, நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 230, ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 240 மற்றும் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், குறிப்பிட்ட விலையை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், தீவிர சோதனைகள் மற்றும் விசாரணைகள் நாடளாவிய ரீதியில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சில சந்தைகளில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைகள் மாற்றப்பட்டுள்ளன என்ற தவறான தகவல்களை சில மொத்த விற்பனையாளர்கள் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் பரப்பி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த போலி பிரசாரங்கள்ன மூலம் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ய முயற்சி செய்வதாகவும், இதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.மேலும், இம்மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, 1,555 விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement