• Sep 19 2024

சர்வதேச விருதுகளை பெற்ற இயக்குனர் மதுசுதன் கிளிநொச்சியில் கௌரவிப்பு!

Sharmi / Dec 31st 2022, 2:17 pm
image

Advertisement

ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் தமிழ் மக்களின் வலிகளை 16 நாடுகளுக்கு கொண்டு சென்று 29 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது.

அண்மையில் இடம்பெற்ற நேபாள அரசின் கலாச்சார விழாவில் இத்திரைப்படத்துக்காக இதை இயக்கிய மதிசுதா நேரடியாக அழைத்துக் கெளரவிக்கப்பட்டிருந்தார்.

தயாரிப்பாளரே கிடைக்காத உள்நாட்டு சினிமாவில் ஐபோனில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பெரிய பெரிய நிறுவனங்களின் படங்களுக்குள் இவ் விருதைப் பெற்றிருக்கின்றது. எம்மவர்களின் வலிகளை தனது திறமை மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கிறார் மதிசுதா.

இந்நிலையில் மதிசுதாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இன்று நடைபெற்ற ஒளிவிழாவில் அழைத்து கௌரவித்தனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அருட்தந்தையர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உபதவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




சர்வதேச விருதுகளை பெற்ற இயக்குனர் மதுசுதன் கிளிநொச்சியில் கௌரவிப்பு ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் தமிழ் மக்களின் வலிகளை 16 நாடுகளுக்கு கொண்டு சென்று 29 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது.அண்மையில் இடம்பெற்ற நேபாள அரசின் கலாச்சார விழாவில் இத்திரைப்படத்துக்காக இதை இயக்கிய மதிசுதா நேரடியாக அழைத்துக் கெளரவிக்கப்பட்டிருந்தார்.தயாரிப்பாளரே கிடைக்காத உள்நாட்டு சினிமாவில் ஐபோனில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பெரிய பெரிய நிறுவனங்களின் படங்களுக்குள் இவ் விருதைப் பெற்றிருக்கின்றது. எம்மவர்களின் வலிகளை தனது திறமை மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கிறார் மதிசுதா.இந்நிலையில் மதிசுதாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இன்று நடைபெற்ற ஒளிவிழாவில் அழைத்து கௌரவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அருட்தந்தையர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உபதவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement