• May 03 2024

மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!

Sharmi / Jan 28th 2023, 11:12 am
image

Advertisement

உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமான நேற்று (வியாழக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த மருந்துகளை வாங்குவதற்காக தனியார் மருத்துவமனைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்திருப்பதால், விரைவில் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது.இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமான நேற்று (வியாழக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.இந்த மருந்துகளை வாங்குவதற்காக தனியார் மருத்துவமனைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்திருப்பதால், விரைவில் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement