பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று முதல் தடவையாக விசாரணை குழுவிடம் முன்னிலையாகவுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யப்பட்டது.
இந்நிலையில், விசாரணையின் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கமைய இந்த விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற குழு அறை 8இல் கூடவுள்ளது.
இந்தக் குழு கடந்த 15ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடி விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்துக் கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று முதல் தடவையாக விசாரணை குழுவிடம் முன்னிலையாகவுள்ளார்.பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யப்பட்டது.இந்நிலையில், விசாரணையின் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.இதற்கமைய இந்த விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற குழு அறை 8இல் கூடவுள்ளது.இந்தக் குழு கடந்த 15ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடி விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்துக் கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.