• May 20 2024

கொழும்பு துறைமுக நகரத்தில் பணத்தை முதலீடு செய்ய தயங்கும் முதலீட்டாளர்கள்

Chithra / Dec 15th 2022, 7:44 am
image

Advertisement

போர்ட் சிட்டி கொழும்பு சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பான விதிமுறைகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் தங்கள் பணத்தை வைக்க தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்டமூலம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும், போர்ட் சிட்டி கொழும்பு சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.


இலங்கை அரசாங்கத்தால் இந்த விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் வரை தங்களுடைய சந்தைப்படுத்தல் உத்திகளை செயற்படுத்த முடியவில்லை என்று போர்ட் சிட்டியின் பிரதிப்பணிப்பாளர் துல்சி அலுவிஹார தெரிவித்துள்ளார்.

வரிவிதிப்பு தொடர்பான விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தும் வரை, எந்தவொரு தரப்பினரிடமும் போட் சிட்டியின் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவத்தை தம்மால் வழங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


இதேவேளை சுற்றுலாத்துறையை மையப்படுத்தி, 7 மில்லியன் டொலர்கள் முதலீட்டிலான சுங்கத்தீர்வையற்ற விற்பனையகம் ஒன்று 2023 இல் போட் சிட்டியில் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுக நகரத்தில் பணத்தை முதலீடு செய்ய தயங்கும் முதலீட்டாளர்கள் போர்ட் சிட்டி கொழும்பு சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பான விதிமுறைகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் தங்கள் பணத்தை வைக்க தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்டமூலம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும், போர்ட் சிட்டி கொழும்பு சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.இலங்கை அரசாங்கத்தால் இந்த விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் வரை தங்களுடைய சந்தைப்படுத்தல் உத்திகளை செயற்படுத்த முடியவில்லை என்று போர்ட் சிட்டியின் பிரதிப்பணிப்பாளர் துல்சி அலுவிஹார தெரிவித்துள்ளார்.வரிவிதிப்பு தொடர்பான விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தும் வரை, எந்தவொரு தரப்பினரிடமும் போட் சிட்டியின் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவத்தை தம்மால் வழங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.இதேவேளை சுற்றுலாத்துறையை மையப்படுத்தி, 7 மில்லியன் டொலர்கள் முதலீட்டிலான சுங்கத்தீர்வையற்ற விற்பனையகம் ஒன்று 2023 இல் போட் சிட்டியில் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement