தையிட்டியில் சட்ட விரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று (04.01.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீதி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் யாழ் நாக விகாரையில் அவ் விகாரையின் தலைமைப்பிற்கு மற்றும் சமய தலைவர்கள் நீதி அமைச்சர் ஆகியோரின் பங்கேற்போடு தையிட்டியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட விகாரை காரணமாக பாதிக்கப்பட்டவர்களோடு கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது சமய பிரச்சினையாக உருவேற்றப்பட்டு வருகின்றது. உண்மையில் இது தமிழர்களின் தேசிய அரசியல் சார்ந்த பிரச்சனை. சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட விகாரை மற்றும் மட ஆலயத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் தமிழர்களிடமும் அரசும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மன்னிப்பு கோருவதோடு தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதி உறுதிப்படுத்தப்படுதலும் வேண்டும். அதுவே சமய மற்றும் இன நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும்.
படையினர் தமது இராணுவ வரையறைகளுக்கு அப்பால் சென்று நாட்டின் சட்டத்தையும் மீறி அரச வளங்களையும், தனியார் வளங்களையும் உபயோகித்து இன மற்றும் சமய முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையோடு தையிட்டியில் விகாரை எழுப்பியுள்ளதோடு அதனை மேலும் பலப்படுத்த மடாலயத்தையும் கட்டியுள்ளனர்.
கட்டிட மற்றும் நாட்டின் சட்ட நெறிமுறை தவறிய குற்றவாளிகள், இதற்கு அனுமதி அளித்த அரசியல் தலைமைகள், துணை நின்ற பேரினவாத சக்திகளை நீதி முன் நிறுத்த திராணியற்ற அரசும் நீதி அமைச்சரும் சமய நல்லிணக்கம் எனும் போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே.
அதுவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கையில் அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில் மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக மறைமுகமாக எடுக்கப்படும் முயற்சியாகவே இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனலாம்.
அத்தோடு இதயச் சுத்தியோடு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி ஆட்சியாளர்கள் பயணிக்க விரும்புகிறார்கள் இல்லை என்பதையுமே வெளிபடுத்துகின்றது. இது சாதாரண மக்களை அழைத்து அரசியல் பம்மாத்து காட்டும் வெளி வேடமே.
கடந்து வருடம் நிகழ்ந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தமிழர்களின் பூமிக்கு வந்து 'அரசியலில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்' என்றவர் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலும் அதே கருத்தினை வெளிப்படுத்தினார். அரசமைத்த பின்னர் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறியவர்கள் இப்போது அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது அதற்கு பல சட்ட வழிமுறைகள் இருக்கின்றன என்று கூறுவது ஏன்?
தேர்தலுக்கு முன்பாக கூறியதும் தேர்தலுக்கு பின்பாகக் கூறியதும் ஆட்சி பீடத்திலிருந்து கூறுவதும் நேரெதிர் கருத்துக்களாகவே உள்ளன.அதைப் போன்று தான் தையிட்டி விவகாரத்திலும் நீதி நிலை நாட்டப்படும் என்றவர்கள் தற்போது எத்தகைய நீதி என கூறமுடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் அழைத்து கலந்துரையாடல் நடத்த நினைப்பது மக்களை திசைதிருப்பி முட்டாள்கள் ஆக்கும் சிந்தனையில் அடிப்படையிலிருந்தே.
திஸ்ச விகாரை கட்டப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பிற்கு வந்து பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி அவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியும் பின்னர் நம்பிக்கையோடு ஊர் திரும்பி மகிழ்ந்திருக்கையில் அம் மகிழ்வில் மண் அள்ளி தூவியதன் அடையாளமாக குறித்த விகாரைக்கு அண்மையில் சட்ட விரோதமாக மடாலயம் கட்டப்பட்டு அரச ஆசீர்வாதத்தோடு மங்கலகரமாக திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பாக பௌத்த சாசன அமைச்சரோஇ நீதி அமைச்சரோ தேசிய மக்கள் சக்தியில் இன மற்றும் சமய நல்லிணக்கம் சார்ந்து கருத்து தெரிவிப்பவர்கள் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில் பாதிக்கப்பட்டவர்களோடு கலந்துரையாடல் நடப்பதற்கு அவசரப்படுவதேன்? எல்லாம் கட்சி அரசியலும் தேர்தல் அரசியலுமே.
சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் தமிழர்களின் அரசியல் மைய பிரச்சினையாகும். அத்தோடு கட்டமைக்கப்பட்ட பேரினவாத அரச பயங்கரவாத பிரச்சினையுமாகும். இதற்கு அரசியல் ரீதியிலான நீதியான தீர்விற்கு முன்வர துணிவில்லாது நிலமிழந்த மக்களின் குறுகிய பிரச்சனையாக மட்டுப்படுத்தி அவர்களோடு மட்டும் கலந்துரையாடுவதும் ஏனைய சமய தலைவர்களையும் அழைத்து ஆசி பெறுவதும் பிரச்சினையை மூடி வளர்ப்பதற்கான திட்டமே. அத்தோடு இதன் மூலம் தாம் விரும்பிய தீர்வினை முன்வைக்கவும் ஆட்சியாளர்கள் விரும்பலாம். ஆனால் இதனை தமிழர்கள் ஏற்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் முக்கிய பிரச்சினை எதனையும் தீர்க்க முன்வரவில்லை. அவ்வாறே தமிழர்கள் முகம் கொடுக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வை முன் வைக்கவும் ஆயத்தம் இல்லை. எனினும் வடக்கு கிழக்கில் தமது அரசியலை பலப்படுத்துவதற்கு பல்வேறு புத்திகளை கையாளும் தந்திரமாகவே தையிட்டி தொடர்பில் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அரசியல் சதிவலையில் தமிழர்கள் சிக்க மாட்டார்கள்.
இவர்களின் அரசியலை பலப்படுத்த இவர்களின் அரசியலில் விட்டில் பூச்சிகளானோர் தமிழர்களை சிக்க வைக்க முயல்வர். அத்தகையவர்கள் தமிழின துரோகிகள்இஇன அழிப்பாளர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்.
தையிட்டி சார்பாகவும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாகவும் நீதியான நேர்மையான தீர்வு எதுவும் இன்றி மீண்டும் மீண்டும் தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்ய நினைப்பவர்களை ஜனநாயக ரீதியில் அடிமட்டத்தில் அகற்றுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சி தேர்தலை அனுகுவோம்.ஏமாற்று தேர்தல் அரசியல் வாதிகளுக்கு தமிழர்கள் தக்க பாடம் புகட்டவும் வேண்டும். அது மட்டுமல்லாது தையிட்டி தொடர்பில் நீதியான தீர்வு கிடைக்கும் வரையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் திரட்சியோடு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் அதுவே எமது அரசியலுக்கு வலு சேர்க்கும்.
தையிட்டியில் சட்ட விரோத விகாரை, பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதற்கே - அருட்தந்தை தெரிவிப்பு தையிட்டியில் சட்ட விரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.இன்று (04.01.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நீதி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் யாழ் நாக விகாரையில் அவ் விகாரையின் தலைமைப்பிற்கு மற்றும் சமய தலைவர்கள் நீதி அமைச்சர் ஆகியோரின் பங்கேற்போடு தையிட்டியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட விகாரை காரணமாக பாதிக்கப்பட்டவர்களோடு கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது சமய பிரச்சினையாக உருவேற்றப்பட்டு வருகின்றது. உண்மையில் இது தமிழர்களின் தேசிய அரசியல் சார்ந்த பிரச்சனை. சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட விகாரை மற்றும் மட ஆலயத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் தமிழர்களிடமும் அரசும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மன்னிப்பு கோருவதோடு தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதி உறுதிப்படுத்தப்படுதலும் வேண்டும். அதுவே சமய மற்றும் இன நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும்.படையினர் தமது இராணுவ வரையறைகளுக்கு அப்பால் சென்று நாட்டின் சட்டத்தையும் மீறி அரச வளங்களையும், தனியார் வளங்களையும் உபயோகித்து இன மற்றும் சமய முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையோடு தையிட்டியில் விகாரை எழுப்பியுள்ளதோடு அதனை மேலும் பலப்படுத்த மடாலயத்தையும் கட்டியுள்ளனர். கட்டிட மற்றும் நாட்டின் சட்ட நெறிமுறை தவறிய குற்றவாளிகள், இதற்கு அனுமதி அளித்த அரசியல் தலைமைகள், துணை நின்ற பேரினவாத சக்திகளை நீதி முன் நிறுத்த திராணியற்ற அரசும் நீதி அமைச்சரும் சமய நல்லிணக்கம் எனும் போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே.அதுவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கையில் அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில் மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக மறைமுகமாக எடுக்கப்படும் முயற்சியாகவே இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனலாம். அத்தோடு இதயச் சுத்தியோடு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி ஆட்சியாளர்கள் பயணிக்க விரும்புகிறார்கள் இல்லை என்பதையுமே வெளிபடுத்துகின்றது. இது சாதாரண மக்களை அழைத்து அரசியல் பம்மாத்து காட்டும் வெளி வேடமே.கடந்து வருடம் நிகழ்ந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தமிழர்களின் பூமிக்கு வந்து 'அரசியலில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்' என்றவர் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலும் அதே கருத்தினை வெளிப்படுத்தினார். அரசமைத்த பின்னர் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறியவர்கள் இப்போது அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது அதற்கு பல சட்ட வழிமுறைகள் இருக்கின்றன என்று கூறுவது ஏன் தேர்தலுக்கு முன்பாக கூறியதும் தேர்தலுக்கு பின்பாகக் கூறியதும் ஆட்சி பீடத்திலிருந்து கூறுவதும் நேரெதிர் கருத்துக்களாகவே உள்ளன.அதைப் போன்று தான் தையிட்டி விவகாரத்திலும் நீதி நிலை நாட்டப்படும் என்றவர்கள் தற்போது எத்தகைய நீதி என கூறமுடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் அழைத்து கலந்துரையாடல் நடத்த நினைப்பது மக்களை திசைதிருப்பி முட்டாள்கள் ஆக்கும் சிந்தனையில் அடிப்படையிலிருந்தே.திஸ்ச விகாரை கட்டப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பிற்கு வந்து பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி அவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியும் பின்னர் நம்பிக்கையோடு ஊர் திரும்பி மகிழ்ந்திருக்கையில் அம் மகிழ்வில் மண் அள்ளி தூவியதன் அடையாளமாக குறித்த விகாரைக்கு அண்மையில் சட்ட விரோதமாக மடாலயம் கட்டப்பட்டு அரச ஆசீர்வாதத்தோடு மங்கலகரமாக திறந்து வைக்கப்பட்டது. இது தொடர்பாக பௌத்த சாசன அமைச்சரோஇ நீதி அமைச்சரோ தேசிய மக்கள் சக்தியில் இன மற்றும் சமய நல்லிணக்கம் சார்ந்து கருத்து தெரிவிப்பவர்கள் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில் பாதிக்கப்பட்டவர்களோடு கலந்துரையாடல் நடப்பதற்கு அவசரப்படுவதேன் எல்லாம் கட்சி அரசியலும் தேர்தல் அரசியலுமே.சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் தமிழர்களின் அரசியல் மைய பிரச்சினையாகும். அத்தோடு கட்டமைக்கப்பட்ட பேரினவாத அரச பயங்கரவாத பிரச்சினையுமாகும். இதற்கு அரசியல் ரீதியிலான நீதியான தீர்விற்கு முன்வர துணிவில்லாது நிலமிழந்த மக்களின் குறுகிய பிரச்சனையாக மட்டுப்படுத்தி அவர்களோடு மட்டும் கலந்துரையாடுவதும் ஏனைய சமய தலைவர்களையும் அழைத்து ஆசி பெறுவதும் பிரச்சினையை மூடி வளர்ப்பதற்கான திட்டமே. அத்தோடு இதன் மூலம் தாம் விரும்பிய தீர்வினை முன்வைக்கவும் ஆட்சியாளர்கள் விரும்பலாம். ஆனால் இதனை தமிழர்கள் ஏற்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் முக்கிய பிரச்சினை எதனையும் தீர்க்க முன்வரவில்லை. அவ்வாறே தமிழர்கள் முகம் கொடுக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வை முன் வைக்கவும் ஆயத்தம் இல்லை. எனினும் வடக்கு கிழக்கில் தமது அரசியலை பலப்படுத்துவதற்கு பல்வேறு புத்திகளை கையாளும் தந்திரமாகவே தையிட்டி தொடர்பில் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அரசியல் சதிவலையில் தமிழர்கள் சிக்க மாட்டார்கள். இவர்களின் அரசியலை பலப்படுத்த இவர்களின் அரசியலில் விட்டில் பூச்சிகளானோர் தமிழர்களை சிக்க வைக்க முயல்வர். அத்தகையவர்கள் தமிழின துரோகிகள்இஇன அழிப்பாளர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்.தையிட்டி சார்பாகவும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாகவும் நீதியான நேர்மையான தீர்வு எதுவும் இன்றி மீண்டும் மீண்டும் தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்ய நினைப்பவர்களை ஜனநாயக ரீதியில் அடிமட்டத்தில் அகற்றுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சி தேர்தலை அனுகுவோம்.ஏமாற்று தேர்தல் அரசியல் வாதிகளுக்கு தமிழர்கள் தக்க பாடம் புகட்டவும் வேண்டும். அது மட்டுமல்லாது தையிட்டி தொடர்பில் நீதியான தீர்வு கிடைக்கும் வரையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் திரட்சியோடு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் அதுவே எமது அரசியலுக்கு வலு சேர்க்கும்.