• Sep 20 2024

வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் முறைகேடு! சர்வேஸ்வரன் பகிரங்கம்! SamugamMedia

Chithra / Feb 21st 2023, 5:14 pm
image

Advertisement

வடக்கு மாகாண சுகாதார நிர்வாக விடயத்தில் உயர் பொறுப்புக்கான பதவிக்கு சட்டவிரோதமானதும், முறை கோடானதுமான நியமனம் நடைபெற்றுள்ளது என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக அண்மையில் திலிப் லியானகே  நியமிக்கப்பட்டுள்ளார். 

வடக்கு மாகாணத்தின் சுகாதார நிர்வாக சேவைகள் ஆணையாளராக வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் அவர்கள் இருந்துள்ளார். அவரது காலம் முடிவடைந்த பிறகு அவரது இடத்திற்கு அடுத்ததாக பிரதி ஆணையாளராக வைத்திய கலாநிதி நந்தகுமார் சுகாதார நிர்வாக சேவையாளர் பட்டியலில் முன்னணியிலுள்ளார்.

அவ்வாறான தகுதியும், அனுபவமும்  உடைய ஒருவர் இருக்கத்தக்கதாக இந்தப் பட்டியலில் 68 ஆவது இடத்தில் இருக்கும் திலீப் லியானகே எல்லபிட்டிய ஆதார வைத்தியசாலையில் சுப்ரீனாக கடமையாற்றியவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனியர் தரபட்டியலில் முதலாவதாகவும், கேதீஸ்வரனுக்கு அடுத்ததாக இருப்பவர் நந்தகுமார்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் பதில் ஆணையாளராக குறித்த காலங்கள் கடமையாற்றி அனுபவம் வாய்ந்தவர்.

இந்த நியமனத்தை செய்யும் பொறுப்பும் கடமையும் மாகாண சபைக்குரிய அதிகாரம் ஆகும். 

ஒரு மாகாண திணைக்கள ஆணையாளரையோ ஏனைய வைத்தியர்களையோ நியமித்தல், இடம் மாற்றம் செய்தல் என்பன மாகாண சபைக்குரியது. 

மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட  ஆட்சி இல்லாத பட்சத்தில் அந்த அதிகாரமும் பொறுப்பும் ஆளுநருக்குரியதாகும். முறைகேடாக  ஒருவர் அனுப்பப்படும் போது அவரை ஏற்பதும் நிராகரிப்பதும் ஆளுநரின் பொறுப்பும் கடமையும். இவ்வாறு இருக்கையில் முறைகோடான நியமனத்தை செய்தவர் ஆளுநர்.

SLAS பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் இலங்கையில் எந்தப் பகுதியிலும் வேலை செய்யலாம். அதேபோல் கல்வி நிர்வாக சேவை என்ன பல சேவைகள் உண்டு. 

மாகாணத்திற்கான தகுதி வாய்ந்த அதிகாரிகள் இல்லாத போது அந்த மாகாணத்தினுடைய  மாகாண சபையின் அமைச்சர்கள், முதலமைச்சர் அவர்கள் இல்லாத பட்சத்தில் ஆளுநர் மத்திய அரசாங்கத்திடம் குறித்த பதவிக்கு ஆள் தேவையென என கேட்கும் போது அவர்கள் விடுவிக்க முடியும். அவ்வாறு விடுவிக்கும் ஒருவரை ஏற்பதா? இல்லையா? என்பதை மாகாண சபை தீர்மானிக்கும். 

இன்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாகாண சபை இல்லாத காரணத்தினால் ஆளுநரின் பொறுப்பாக உள்ளது. மத்திய அரசாங்கம் ஒருவரை அனுப்பினாலும் அவருக்கு ஆளுநரின் நியமன கடிதம் இல்லாமல் அந்தப் பதவியை ஏற்க முடியாது. 

இன்று லியானகே பதவியை ஏற்றாரெனில்  ஆளுநரின் கடிதத்தை பெற்றாரா? இல்லையா? என்ற கேள்வி உள்ளது. 

ஆளுநர் நியமன கடிதம் கொடுக்காமல் பொறுப்பேற்று இருக்க முடியாது. அவ்வாறாக கடிதம் கொடுக்கப்பட்டிருந்தால் ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்டியோகம் செய்துள்ளார். 

மாகாணத்துக்குரிய திணைக்கள ஆணையாளர் இணையும் ஏனைய முக்கிய அதிகாரிகளையும் நியமிக்கும் பொறுப்பு மாகாண சபைக்குரியதாக  உள்ளபோதும் இவரது நியமனம் சட்டவிரோதமானது. 

13ஆவது திருத்த சட்டத்துக்கும் வடக்கு மாகாணத்தில் கொண்டுவரப்பட்ட மருத்துவ சேவைகள்

நியதி சட்டத்தில்  மாகாண   சுகாதார சேவைகள் ஆணையாளரை நியமிக்கும் பொறுப்பு மாகாண சபை கூறியது, என கூறப்பட்டது. இந்த நியமனமானது இந்த சட்டங்களுக்கு முரணான செயற்பாடு ஆகும். 

ஆகவே  முறைகேடானதும் சட்ட விரோதமானதுமான நியமத்தை அடுத்து வரக்கூடிய வாரம் ஒன்றுக்குள் ஆளுநர் ரத்து செய்து இதற்குரிய சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ரத்து செய்ய தவறினால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். என்றார்.

வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் முறைகேடு சர்வேஸ்வரன் பகிரங்கம் SamugamMedia வடக்கு மாகாண சுகாதார நிர்வாக விடயத்தில் உயர் பொறுப்புக்கான பதவிக்கு சட்டவிரோதமானதும், முறை கோடானதுமான நியமனம் நடைபெற்றுள்ளது என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக அண்மையில் திலிப் லியானகே  நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் சுகாதார நிர்வாக சேவைகள் ஆணையாளராக வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் அவர்கள் இருந்துள்ளார். அவரது காலம் முடிவடைந்த பிறகு அவரது இடத்திற்கு அடுத்ததாக பிரதி ஆணையாளராக வைத்திய கலாநிதி நந்தகுமார் சுகாதார நிர்வாக சேவையாளர் பட்டியலில் முன்னணியிலுள்ளார்.அவ்வாறான தகுதியும், அனுபவமும்  உடைய ஒருவர் இருக்கத்தக்கதாக இந்தப் பட்டியலில் 68 ஆவது இடத்தில் இருக்கும் திலீப் லியானகே எல்லபிட்டிய ஆதார வைத்தியசாலையில் சுப்ரீனாக கடமையாற்றியவரே நியமிக்கப்பட்டுள்ளார்.சீனியர் தரபட்டியலில் முதலாவதாகவும், கேதீஸ்வரனுக்கு அடுத்ததாக இருப்பவர் நந்தகுமார்.இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் பதில் ஆணையாளராக குறித்த காலங்கள் கடமையாற்றி அனுபவம் வாய்ந்தவர்.இந்த நியமனத்தை செய்யும் பொறுப்பும் கடமையும் மாகாண சபைக்குரிய அதிகாரம் ஆகும். ஒரு மாகாண திணைக்கள ஆணையாளரையோ ஏனைய வைத்தியர்களையோ நியமித்தல், இடம் மாற்றம் செய்தல் என்பன மாகாண சபைக்குரியது. மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட  ஆட்சி இல்லாத பட்சத்தில் அந்த அதிகாரமும் பொறுப்பும் ஆளுநருக்குரியதாகும். முறைகேடாக  ஒருவர் அனுப்பப்படும் போது அவரை ஏற்பதும் நிராகரிப்பதும் ஆளுநரின் பொறுப்பும் கடமையும். இவ்வாறு இருக்கையில் முறைகோடான நியமனத்தை செய்தவர் ஆளுநர்.SLAS பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் இலங்கையில் எந்தப் பகுதியிலும் வேலை செய்யலாம். அதேபோல் கல்வி நிர்வாக சேவை என்ன பல சேவைகள் உண்டு. மாகாணத்திற்கான தகுதி வாய்ந்த அதிகாரிகள் இல்லாத போது அந்த மாகாணத்தினுடைய  மாகாண சபையின் அமைச்சர்கள், முதலமைச்சர் அவர்கள் இல்லாத பட்சத்தில் ஆளுநர் மத்திய அரசாங்கத்திடம் குறித்த பதவிக்கு ஆள் தேவையென என கேட்கும் போது அவர்கள் விடுவிக்க முடியும். அவ்வாறு விடுவிக்கும் ஒருவரை ஏற்பதா இல்லையா என்பதை மாகாண சபை தீர்மானிக்கும். இன்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாகாண சபை இல்லாத காரணத்தினால் ஆளுநரின் பொறுப்பாக உள்ளது. மத்திய அரசாங்கம் ஒருவரை அனுப்பினாலும் அவருக்கு ஆளுநரின் நியமன கடிதம் இல்லாமல் அந்தப் பதவியை ஏற்க முடியாது. இன்று லியானகே பதவியை ஏற்றாரெனில்  ஆளுநரின் கடிதத்தை பெற்றாரா இல்லையா என்ற கேள்வி உள்ளது. ஆளுநர் நியமன கடிதம் கொடுக்காமல் பொறுப்பேற்று இருக்க முடியாது. அவ்வாறாக கடிதம் கொடுக்கப்பட்டிருந்தால் ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்டியோகம் செய்துள்ளார். மாகாணத்துக்குரிய திணைக்கள ஆணையாளர் இணையும் ஏனைய முக்கிய அதிகாரிகளையும் நியமிக்கும் பொறுப்பு மாகாண சபைக்குரியதாக  உள்ளபோதும் இவரது நியமனம் சட்டவிரோதமானது. 13ஆவது திருத்த சட்டத்துக்கும் வடக்கு மாகாணத்தில் கொண்டுவரப்பட்ட மருத்துவ சேவைகள்நியதி சட்டத்தில்  மாகாண   சுகாதார சேவைகள் ஆணையாளரை நியமிக்கும் பொறுப்பு மாகாண சபை கூறியது, என கூறப்பட்டது. இந்த நியமனமானது இந்த சட்டங்களுக்கு முரணான செயற்பாடு ஆகும். ஆகவே  முறைகேடானதும் சட்ட விரோதமானதுமான நியமத்தை அடுத்து வரக்கூடிய வாரம் ஒன்றுக்குள் ஆளுநர் ரத்து செய்து இதற்குரிய சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ரத்து செய்ய தவறினால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement