நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடைக்கு குரங்குதான் காரணம் என்று கூறுவது பொருத்தமில்லாத ஒரு கருத்தாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்படும் திடீர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.
எமது நாட்டில் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதாகவும் இதற்கு மின் தடையே பிரதான காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார் .
இதற்கு உரிய அமைச்சர் எடுத்திருக்கும் தீர்வுதான் என்ன எனவும் இதன்போது கேள்வியெழுப்பினார்.
எனவே, இந்த மின்தடைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை நாட்டுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடைக்கு குரங்குதான் காரணமா சபையில் சஜித் கேள்வி நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடைக்கு குரங்குதான் காரணம் என்று கூறுவது பொருத்தமில்லாத ஒரு கருத்தாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்படும் திடீர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.எமது நாட்டில் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதாகவும் இதற்கு மின் தடையே பிரதான காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார் .இதற்கு உரிய அமைச்சர் எடுத்திருக்கும் தீர்வுதான் என்ன எனவும் இதன்போது கேள்வியெழுப்பினார்.எனவே, இந்த மின்தடைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை நாட்டுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .