பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் திங்கள் கிழமை(17) காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று(14) பாராளுமன்றிற்கு அறிவித்தார்.
பிரதமரின் வேண்டுதலுக்கிணங்க சபாநாயகரினால் நிலையியற் கட்டளை இல. 16 இன் பிரகாரம் இன்றையதினம் மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதற்கு அமைவாக பாராளுமன்றம் இன்று கூட்டப்பட்டது.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமார் 30 நிமிடங்கள் வரையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு; சபாநாயகர் அறிவிப்பு. பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் திங்கள் கிழமை(17) காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று(14) பாராளுமன்றிற்கு அறிவித்தார். பிரதமரின் வேண்டுதலுக்கிணங்க சபாநாயகரினால் நிலையியற் கட்டளை இல. 16 இன் பிரகாரம் இன்றையதினம் மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதற்கு அமைவாக பாராளுமன்றம் இன்று கூட்டப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமார் 30 நிமிடங்கள் வரையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.