2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட கிராமங்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், வீதி புனரமைப்புக்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவை புனரமைத்தல்,
நிலத்தடி நீர் மாசடைதல், கழிவுகள் மீட்டெடுத்தல், நன்னீர் குடிநீர் திட்டம், சந்தைப்படுத்தல் உட்கட்டமைப்பு, உள்ளூர் கடன், உற்பத்திகள், தேசிய அபிவிருத்தி திட்டமிடல், ஒருங்கிணைந்த கிராமிய சமூக பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
வரவு செலவு திட்டத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது. அதனை கஜேந்திரமார் எம்.பி முன்மொழிய ரஜீவன் எம்.பி வழிமெரிழிந்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.கஜேந்திரகுமார், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் வ.பவானந்தராஜா, பொ.ரஜீவன், இளங்குமரன், மேலதிக அரச காணி அதிபர் ஸ்ரீ மோகனன், திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரகுமார், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபாலன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பதவிநிலை அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் யாழில் விசேட கலந்துரையாடல் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட கிராமங்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், வீதி புனரமைப்புக்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவை புனரமைத்தல்,நிலத்தடி நீர் மாசடைதல், கழிவுகள் மீட்டெடுத்தல், நன்னீர் குடிநீர் திட்டம், சந்தைப்படுத்தல் உட்கட்டமைப்பு, உள்ளூர் கடன், உற்பத்திகள், தேசிய அபிவிருத்தி திட்டமிடல், ஒருங்கிணைந்த கிராமிய சமூக பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.வரவு செலவு திட்டத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது. அதனை கஜேந்திரமார் எம்.பி முன்மொழிய ரஜீவன் எம்.பி வழிமெரிழிந்துள்ளார். இக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.கஜேந்திரகுமார், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் வ.பவானந்தராஜா, பொ.ரஜீவன், இளங்குமரன், மேலதிக அரச காணி அதிபர் ஸ்ரீ மோகனன், திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரகுமார், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபாலன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பதவிநிலை அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.