• May 13 2024

இந்தியாவில் பிபிசி ஊடகத்திற்கு தடையா? வெளியான நீதிமன்ற அறிவிப்பு!

Sharmi / Feb 10th 2023, 3:19 pm
image

Advertisement

இந்தியாவில் பிபிசியை தடை செய்யவேண்டும் என்ற மனுவை இந்திய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் எடுத்த இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட தடை செய்ய வேண்டுமெனவும் இந்த ஆவணப்படத்திற்கு பின்னால் சதி உள்ளதா? என கண்டறிய என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டுமென தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

ஒரு ஆவணப்படம் நாட்டை எப்படி பாதிக்கும்? என்று கேள்வி எழுப்பியஇந்திய உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தது.

இந்தியாவில் பிபிசி ஊடகத்திற்கு தடையா வெளியான நீதிமன்ற அறிவிப்பு இந்தியாவில் பிபிசியை தடை செய்யவேண்டும் என்ற மனுவை இந்திய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் எடுத்த இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட தடை செய்ய வேண்டுமெனவும் இந்த ஆவணப்படத்திற்கு பின்னால் சதி உள்ளதா என கண்டறிய என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை இன்று விசாரித்த இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டுமென தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. ஒரு ஆவணப்படம் நாட்டை எப்படி பாதிக்கும் என்று கேள்வி எழுப்பியஇந்திய உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தது.

Advertisement

Advertisement

Advertisement