• Oct 05 2024

கிளிநொச்சியில் 3 லட்சம் பெறுமதியான பொருட்கள் அபேஸ்!

Sharmi / Feb 10th 2023, 3:31 pm
image

Advertisement

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தையில் அமைந்துள்ள வெற்றிலை வாணிபம் ஒன்றிலேயே குறித்த திருட்டு இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூன்று லட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில், நேற்றைய தினம் 09.02.2023 தனது வர்த்தக நடவடிக்கைகளை முடித்து கடையை பூட்டி விட்டு வீடு சென்றதாகவும் இன்று அதிகாலை 5 மணியளவில் வழமைபோன்று  கடையினை திறப்பதற்காக சென்ற போது, கடையின் முற்றத்தில் நின்ற இருவர்  தன்னைகண்டவுடன் அப்பகுதியிலிருந்து ஓடிச் சென்றனர்.

பின்னர் கடையினை திறக்க முற்ப்பட்டபொழுது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறதை அவதானித்ததாகவும் தொடர்ந்து கடையினை  திறந்து பார்த்தபொழுது அங்கு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர், குறித்த திருட்டு சம்பவத்தில் பெறுமதியான வானொலிப்பட்டி ஒன்றும் இரண்டு லட்சத்துக்கு அதிகமான விலையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த புகையிலை மற்றும் வெற்றிலை, பீடி  போன்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் 3 லட்சம் பெறுமதியான பொருட்கள் அபேஸ் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தையில் அமைந்துள்ள வெற்றிலை வாணிபம் ஒன்றிலேயே குறித்த திருட்டு இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.இதன்போது மூன்று லட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில், நேற்றைய தினம் 09.02.2023 தனது வர்த்தக நடவடிக்கைகளை முடித்து கடையை பூட்டி விட்டு வீடு சென்றதாகவும் இன்று அதிகாலை 5 மணியளவில் வழமைபோன்று  கடையினை திறப்பதற்காக சென்ற போது, கடையின் முற்றத்தில் நின்ற இருவர்  தன்னைகண்டவுடன் அப்பகுதியிலிருந்து ஓடிச் சென்றனர்.பின்னர் கடையினை திறக்க முற்ப்பட்டபொழுது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறதை அவதானித்ததாகவும் தொடர்ந்து கடையினை  திறந்து பார்த்தபொழுது அங்கு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர், குறித்த திருட்டு சம்பவத்தில் பெறுமதியான வானொலிப்பட்டி ஒன்றும் இரண்டு லட்சத்துக்கு அதிகமான விலையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த புகையிலை மற்றும் வெற்றிலை, பீடி  போன்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement