• May 14 2024

பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராடுவோர் சஹரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்- வியாழேந்திரன் கருத்து!

Sharmi / Feb 10th 2023, 3:43 pm
image

Advertisement

சஹரான் அவமான சின்னம், பள்ளிவாசலை இடித்து தர மட்டமாக்க வேண்டும் என்று கூறியவர்கள் இன்று பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஏப்ரல் 21 சஹரான் தலைமையிலான ஈஸ்டர் குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் மீது மிலேச்சத்தனமான குண்டு தாக்குதால் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர்.

சஹரன் அவர்கள் பாவித்ததாக கூடிய அங்கிருந்து திட்டங்களை தீட்டி அந்தப் பள்ளிவாசலை பாதுகாப்பு தரப்பினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

ஆனால் அந்தப் பள்ளிவாசலை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க கோரி காத்தான்குடியில் ஒரு சில சிவில் சமூகம் அமைப்பும், அரசியல் தலைவர்கள் சேர்ந்து கடை அடைப்புடன் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.ஆனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது காத்தான்குடியில் உள்ள சிவில் அமைப்புகள் சில அரசியல் தலைவர்கள் கூறினார்கள் சஹரான் அவமான சின்னம் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று தாக்குதல் நடந்து இன்று மூன்று வருடம்கூட ஆகவில்லை தற்போது பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர்.இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் இதுதான் ஜதார்த்தமான உண்மை எனவும் தெரிவித்தார்.

பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராடுவோர் சஹரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்- வியாழேந்திரன் கருத்து சஹரான் அவமான சின்னம், பள்ளிவாசலை இடித்து தர மட்டமாக்க வேண்டும் என்று கூறியவர்கள் இன்று பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,கடந்த ஏப்ரல் 21 சஹரான் தலைமையிலான ஈஸ்டர் குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் மீது மிலேச்சத்தனமான குண்டு தாக்குதால் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். சஹரன் அவர்கள் பாவித்ததாக கூடிய அங்கிருந்து திட்டங்களை தீட்டி அந்தப் பள்ளிவாசலை பாதுகாப்பு தரப்பினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.ஆனால் அந்தப் பள்ளிவாசலை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க கோரி காத்தான்குடியில் ஒரு சில சிவில் சமூகம் அமைப்பும், அரசியல் தலைவர்கள் சேர்ந்து கடை அடைப்புடன் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.ஆனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது காத்தான்குடியில் உள்ள சிவில் அமைப்புகள் சில அரசியல் தலைவர்கள் கூறினார்கள் சஹரான் அவமான சின்னம் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று தாக்குதல் நடந்து இன்று மூன்று வருடம்கூட ஆகவில்லை தற்போது பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர்.இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் இதுதான் ஜதார்த்தமான உண்மை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement