• Apr 28 2024

இனவாதிகளின் எதிர்பினை கண்டு பின்வாங்கிய ரணில் தற்போது தடுமாற்றத்துடன் உள்ளார்-சபையில் வினோ எம்.பி காட்டம்!

Sharmi / Feb 10th 2023, 3:57 pm
image

Advertisement

13வது திருத்தச்சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய ஒரு தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு மற்றும் இனவாதிகளின் எச்சரிக்கைகளுக்கு பயந்து தற்போது பின்வாங்கி விட்டதாக ரெலோ கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோரதராதலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய ஆட்சிக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர் பின்வாங்கிவிட்டதாக எஸ்.வினோரதராதலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய சிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து அவர்களின் இரத்தம் அனைத்திலும் இனவாதம் கலந்து இருந்ததை அவதானித்திருந்தாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக உதயகம்பன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் 13ஜ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கின்றதாகவும் இது சிங்கள மக்கள் மத்தியில் வாக்குகளை சேகரிப்பதற்காக மட்டுமே இவ்வாறு கருத்து வெளியிடுவதாகவும் இதில் வேறு நோக்கங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாகாண சபை தேர்தல் நடைபெற்று மக்கள் ஆணையுடன் 9 மாகாண சபைகளும் இயங்கியதாகவும் அப்போது இரத்த ஆறு ஓடியிருந்ததா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இனவாதிகளின் எதிர்பினை கண்டு பின்வாங்கிய ரணில் தற்போது தடுமாற்றத்துடன் உள்ளார்-சபையில் வினோ எம்.பி காட்டம் 13வது திருத்தச்சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய ஒரு தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு மற்றும் இனவாதிகளின் எச்சரிக்கைகளுக்கு பயந்து தற்போது பின்வாங்கி விட்டதாக ரெலோ கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோரதராதலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய ஆட்சிக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர் பின்வாங்கிவிட்டதாக எஸ்.வினோரதராதலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய சிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து அவர்களின் இரத்தம் அனைத்திலும் இனவாதம் கலந்து இருந்ததை அவதானித்திருந்தாக அவர் குறிப்பிட்டிருந்தார்.குறிப்பாக உதயகம்பன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் 13ஜ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கின்றதாகவும் இது சிங்கள மக்கள் மத்தியில் வாக்குகளை சேகரிப்பதற்காக மட்டுமே இவ்வாறு கருத்து வெளியிடுவதாகவும் இதில் வேறு நோக்கங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த மாகாண சபை தேர்தல் நடைபெற்று மக்கள் ஆணையுடன் 9 மாகாண சபைகளும் இயங்கியதாகவும் அப்போது இரத்த ஆறு ஓடியிருந்ததா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement