• Nov 23 2024

வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர் நியமனம்..!!

Tamil nila / May 13th 2024, 10:12 pm
image

வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் கடந்த காலங்களில் வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி கிளைக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபராக சேவையாற்றியிருந்தார் என்பதுடன், வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளர் அவர்கள் ஓய்வு பெற்றிருந்த நிலையில், குறிப்பிட்ட சிலகாலம் பதில் பிரதேச செயலாளராக அங்கு பணியாற்றியிருந்தார். 

இதன்போது ஒருசில அரசியல் அழுத்தங்களால் மீண்டும் மேலதிக அரசாங்க அதிபராக சேவையில் இருந்த நிலையில், பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகணா சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளராக நிரந்தர நியம்மனம் வழங்கப்பட்டு இன்றைய தினம் கடைமையை பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெங்கல செட்டிகுளம் பகுதியில் பல காணி பிரச்சினைகள் தொடர்ந்துவருவதால் இவரது நியமனம் மூலம் நல்ல ஒரு தீர்வை மக்கள் பெற்றுக்கொள்வார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர் நியமனம். வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இவர் கடந்த காலங்களில் வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி கிளைக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபராக சேவையாற்றியிருந்தார் என்பதுடன், வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளர் அவர்கள் ஓய்வு பெற்றிருந்த நிலையில், குறிப்பிட்ட சிலகாலம் பதில் பிரதேச செயலாளராக அங்கு பணியாற்றியிருந்தார். இதன்போது ஒருசில அரசியல் அழுத்தங்களால் மீண்டும் மேலதிக அரசாங்க அதிபராக சேவையில் இருந்த நிலையில், பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகணா சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளராக நிரந்தர நியம்மனம் வழங்கப்பட்டு இன்றைய தினம் கடைமையை பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.வெங்கல செட்டிகுளம் பகுதியில் பல காணி பிரச்சினைகள் தொடர்ந்துவருவதால் இவரது நியமனம் மூலம் நல்ல ஒரு தீர்வை மக்கள் பெற்றுக்கொள்வார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement