அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உத்தியோகபூர்வ இல்லம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து வெளியேற வேண்டுமாயின் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அறிவித்தால் மஹிந்த ராஜபக்ஷ அந்த வீட்டில் சில கணங்கள் கூட தங்கமாட்டார்.
இதேவேளை, உத்தியோகபூர்வ இல்லத்தை கையளித்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகும் மஹிந்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உத்தியோகபூர்வ இல்லம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து வெளியேற வேண்டுமாயின் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு அறிவித்தால் மஹிந்த ராஜபக்ஷ அந்த வீட்டில் சில கணங்கள் கூட தங்கமாட்டார்.இதேவேளை, உத்தியோகபூர்வ இல்லத்தை கையளித்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.