• May 17 2024

மஹிந்த மீண்டும் பிரதமரா..? மொட்டு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ விளக்கம் samugammedia

Chithra / May 15th 2023, 1:49 pm
image

Advertisement

மஹிந்த ராஜபக்ஷ களவாக அல்லது பலவந்தமாக இராணுவத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியை எடுக்கமாட்டார் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில், 

மக்களுக்காக பதவியை கைவிடும் ஒரேயொரு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.  மஹிந்த  ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முயற்சியின் அடிப்படையில், கொழும்பு நகர் முழுவதும் இராணுவத்தினர் களமிறங்கப்பட்டனர் என்ற பிரசாரம் முழுமையாக பொய்யானது.  

அத்துடன் அடிப்படையற்ற கதையாகும் என்று தெரிவித்த காரியவசம், அரசியல் ரீதியில் பின்னடைவை சந்தித்த நபரே இவ்வாறான கதைகளை அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்

மஹிந்த மீண்டும் பிரதமரா. மொட்டு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ விளக்கம் samugammedia மஹிந்த ராஜபக்ஷ களவாக அல்லது பலவந்தமாக இராணுவத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியை எடுக்கமாட்டார் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்காக பதவியை கைவிடும் ஒரேயொரு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.  மஹிந்த  ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முயற்சியின் அடிப்படையில், கொழும்பு நகர் முழுவதும் இராணுவத்தினர் களமிறங்கப்பட்டனர் என்ற பிரசாரம் முழுமையாக பொய்யானது.  அத்துடன் அடிப்படையற்ற கதையாகும் என்று தெரிவித்த காரியவசம், அரசியல் ரீதியில் பின்னடைவை சந்தித்த நபரே இவ்வாறான கதைகளை அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement