வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை மேலும் அடிமையாக்கு நோக்குடன் கொண்டுவரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டுமென வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு இயக்கத்தின் இணைப்பாளர் வல்லிபுரம் வாசுகி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று காலை தொடக்கம் பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினால் அதிகமான தமிழ்ர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகியுள்ளதாக வல்லிபுரம் வாசுகி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த சட்டமூலத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலையில் வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கம் மக்கணை அடிமையாக்கும் நோக்குடன் புதிய புதிய சட்டங்களை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்களை மேலும் அடிமையாக்கும் நோக்குடன் புதிய சட்டங்களை உருவாக்குகின்றதா அரசாங்கம். samugammedia வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை மேலும் அடிமையாக்கு நோக்குடன் கொண்டுவரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டுமென வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு இயக்கத்தின் இணைப்பாளர் வல்லிபுரம் வாசுகி தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று காலை தொடக்கம் பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினால் அதிகமான தமிழ்ர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகியுள்ளதாக வல்லிபுரம் வாசுகி சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இந்த சட்டமூலத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலையில் வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கம் மக்கணை அடிமையாக்கும் நோக்குடன் புதிய புதிய சட்டங்களை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.