வல்வெட்டித்துறையில் இடம் பெற்ற படுகொலைகளை ஆவணப்படுத்தி இலங்கைக்கு வந்த இந்திய இராணுவப்படை பல கொலைகளை செய்துள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேந்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்
எனது மனச்சாட்சியைப் பொறுத்தவரை இந்த நாட்டில் சமாதானத்தை பேணுவதற்கு வந்த இந்தியப்படை மேற்கொண்ட படுகொலைச் சம்பவங்களை தவறு என்று இந்தியா ஏற்றுக் கொண்டு மன்னிப்புக்கோர வேண்டும்.
தேசிய பத்திரிகைகள் இந்த விடயங்களை மூடி மறைத்துள்ளன. இதனால் பல்வேறு விடயங்கள் வெளிவராமல் இருக்கின்றது.
இங்கு வந்த இந்திய ராணுவத்தை அமைதிப்படை என்றுதான் கூறுவார்கள். அமைதியைப் பேணுவதற்காகத்தான் அவர்கள் வந்தார்கள் என்று அப்பொழுது கூறப்பட்டது. ஆனால் பல கொலைகளை செய்துள்ளார்கள்.
வல்வெட்டித்துறையில் இடம் பெற்ற படுகொலைகளை ஆவணப்படுத்தி, இதற்கு ஒரு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வடக்கும் தெற்கும் இணக்கப்பாட்டோடு ஒரு முன்னெடுப்பை செய்வோமாக இருந்தால் ஏனைய பிரச்சினைகளையும் வெல்வதற்கான வாய்ப்பாக அது அமையும்.
இல்லையென்றால் இவ்வாறு கூட்டங்கள் வைப்பதனால் மாத்திரம் எந்தவிதமான பிரியோசனங்களும் கிடைக்காமல் போய்விடும் என்று தெரிவித்தார்.
இலங்கைக்கு வந்த இந்திய இராணும் அமைதிப்படையா கொலைப்படையா - பிரிட்டோ பெர்னாண்டோ ஆவேசம் வல்வெட்டித்துறையில் இடம் பெற்ற படுகொலைகளை ஆவணப்படுத்தி இலங்கைக்கு வந்த இந்திய இராணுவப்படை பல கொலைகளை செய்துள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேந்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் எனது மனச்சாட்சியைப் பொறுத்தவரை இந்த நாட்டில் சமாதானத்தை பேணுவதற்கு வந்த இந்தியப்படை மேற்கொண்ட படுகொலைச் சம்பவங்களை தவறு என்று இந்தியா ஏற்றுக் கொண்டு மன்னிப்புக்கோர வேண்டும்.தேசிய பத்திரிகைகள் இந்த விடயங்களை மூடி மறைத்துள்ளன. இதனால் பல்வேறு விடயங்கள் வெளிவராமல் இருக்கின்றது.இங்கு வந்த இந்திய ராணுவத்தை அமைதிப்படை என்றுதான் கூறுவார்கள். அமைதியைப் பேணுவதற்காகத்தான் அவர்கள் வந்தார்கள் என்று அப்பொழுது கூறப்பட்டது. ஆனால் பல கொலைகளை செய்துள்ளார்கள்.வல்வெட்டித்துறையில் இடம் பெற்ற படுகொலைகளை ஆவணப்படுத்தி, இதற்கு ஒரு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வடக்கும் தெற்கும் இணக்கப்பாட்டோடு ஒரு முன்னெடுப்பை செய்வோமாக இருந்தால் ஏனைய பிரச்சினைகளையும் வெல்வதற்கான வாய்ப்பாக அது அமையும். இல்லையென்றால் இவ்வாறு கூட்டங்கள் வைப்பதனால் மாத்திரம் எந்தவிதமான பிரியோசனங்களும் கிடைக்காமல் போய்விடும் என்று தெரிவித்தார்.