• Jan 23 2025

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? - வெளியான தகவல்

Chithra / Jan 15th 2025, 9:12 am
image



இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் நிர்வாக உறுப்பினர் வசந்த இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

டிஜிட்டல் அடையாள அட்டையானது தொழில்நுட்பம், பாதுகாப்பு அல்லது வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக வழங்கப்படுகின்றதென ஒருவர் நினைக்கலாம். 

ஆனால், அது அப்படியல்ல. அந்த விவரங்களைப் பெறுவதானது தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காகவாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பயோமெற்றிக் விவரங்களுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. 

இந்த செயல்முறையின் போது ஒரு நபரின் மரபணு (டிஎன்ஏ), கைரேகைகள், குரல், காதுகளின் வடிவம், ஒருவர் நடக்கும் முறைமை, கையெழுத்து தொடர்பான தரவுகள் உட்பட பல்வேறு வகையான தரவுகளைப் பெறுவதற்கு குறித்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன், டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க இந்தியாவுக்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம் என்பதாகும்.  என்றார்.


இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டையானது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது 100 வீதம் பாதுகாப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடையாள அட்டையை தயாரிப்பதற்கு பெரும் தொகை செலவிடப்படும் என்றும் அதில் 50 சதவீதத்தை இந்திய உதவியுடன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைரேகை, முகம் மற்றும் கண் கரு வளையம் ஆகியவற்றை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கப்படும் என்றும், காகிதத்தில் இல்லாமல் டிஜிட்டல் முறையில் கைரேகைகள் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை இம்மாதம் முதல் அறிமுகப்படுத்தி அடுத்த மாதம் முதல் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.


புதிய டிஜிட்டல் அடையாள அட்டையால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா - வெளியான தகவல் இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியது.மக்கள் போராட்ட இயக்கத்தின் நிர்வாக உறுப்பினர் வசந்த இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,டிஜிட்டல் அடையாள அட்டையானது தொழில்நுட்பம், பாதுகாப்பு அல்லது வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக வழங்கப்படுகின்றதென ஒருவர் நினைக்கலாம். ஆனால், அது அப்படியல்ல. அந்த விவரங்களைப் பெறுவதானது தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காகவாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.பயோமெற்றிக் விவரங்களுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. இந்த செயல்முறையின் போது ஒரு நபரின் மரபணு (டிஎன்ஏ), கைரேகைகள், குரல், காதுகளின் வடிவம், ஒருவர் நடக்கும் முறைமை, கையெழுத்து தொடர்பான தரவுகள் உட்பட பல்வேறு வகையான தரவுகளைப் பெறுவதற்கு குறித்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.அதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன், டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க இந்தியாவுக்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம் என்பதாகும்.  என்றார்.இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டையானது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கையானது 100 வீதம் பாதுகாப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த அடையாள அட்டையை தயாரிப்பதற்கு பெரும் தொகை செலவிடப்படும் என்றும் அதில் 50 சதவீதத்தை இந்திய உதவியுடன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கைரேகை, முகம் மற்றும் கண் கரு வளையம் ஆகியவற்றை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கப்படும் என்றும், காகிதத்தில் இல்லாமல் டிஜிட்டல் முறையில் கைரேகைகள் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை இம்மாதம் முதல் அறிமுகப்படுத்தி அடுத்த மாதம் முதல் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement