• Sep 20 2024

இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை அணியா? அல்லது சிங்கள அணியா? – தமிழ் எம்.பி சபையில் கேள்வி..! samugammedia

Chithra / Nov 10th 2023, 4:19 pm
image

Advertisement

 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு காட்டப்படுவதாகவும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வி கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் இது இலங்கை அணி அல்ல எனவும் இது ஒரு சிங்கள அணி என்ற நிலமை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இருந்து வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு இலங்கைக்குள்லேயே போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் வன்னி மாவட்டத்திலே கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் சபையிலே வாக்களிக்கின்ற உரிமை மறுக்கப்பட்டவர்களாக குறித்த மாவட்ட சம்மேளனங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அண்மையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற சமயத்தில் இல்லாத ஒரு தேர்தலுக்கு எதற்காகா நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டிந்தார்.

இந்நிலையில் இல்லாத ஒரு தேர்தலுக்கு எதற்காக தேர்தல் திருத்தச்சட்டங்கள் எனவும் வினோ நோகதாரலிங்கம் எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை அணியா அல்லது சிங்கள அணியா – தமிழ் எம்.பி சபையில் கேள்வி. samugammedia  ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு காட்டப்படுவதாகவும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வி கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் இது இலங்கை அணி அல்ல எனவும் இது ஒரு சிங்கள அணி என்ற நிலமை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.அத்துடன் இலங்கையில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இருந்து வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு இலங்கைக்குள்லேயே போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.மேலும் வன்னி மாவட்டத்திலே கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் சபையிலே வாக்களிக்கின்ற உரிமை மறுக்கப்பட்டவர்களாக குறித்த மாவட்ட சம்மேளனங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.இதேவேளை அண்மையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற சமயத்தில் இல்லாத ஒரு தேர்தலுக்கு எதற்காகா நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டிந்தார்.இந்நிலையில் இல்லாத ஒரு தேர்தலுக்கு எதற்காக தேர்தல் திருத்தச்சட்டங்கள் எனவும் வினோ நோகதாரலிங்கம் எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement