• May 09 2024

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடா..? கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல் samugammedia

Chithra / Aug 8th 2023, 8:11 am
image

Advertisement

 தம்மிடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சில தரப்பினர் அச்சம் வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், தம்மிடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளில் நீர் உள்ளதுடன், 6 மாதங்களின் பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், ஆராய முடியும் எனவும் ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடா. கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல் samugammedia  தம்மிடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சில தரப்பினர் அச்சம் வெளியிட்டிருந்தனர்.எவ்வாறாயினும், தம்மிடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளில் நீர் உள்ளதுடன், 6 மாதங்களின் பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், ஆராய முடியும் எனவும் ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement