• Nov 23 2024

நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடா? - ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Oct 24th 2024, 10:04 am
image


 

கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை , உவர் மலை விளையாட்டு மைதனத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதாக பரவலாக பேசப்படுகிறது. அது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன்.

கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவில் அரிசி கையிருப்பு இருக்கின்றது. 

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் அதன் மூலமாக நாட்டு மக்களுக்கு அரிசியை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுமனே சுற்றுலாத்துறை சார்ந்த தேவைகளுக்காக மாத்திரமே அரிசியினை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் விவசாயிகளுக்கும்,மீனவர்களுக்கு மானியம் வழங்குவதற்கும்,  அரச உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடா - ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு  கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.திருகோணமலை , உவர் மலை விளையாட்டு மைதனத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,தற்போது நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதாக பரவலாக பேசப்படுகிறது. அது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன்.கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவில் அரிசி கையிருப்பு இருக்கின்றது. உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் அதன் மூலமாக நாட்டு மக்களுக்கு அரிசியை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெறுமனே சுற்றுலாத்துறை சார்ந்த தேவைகளுக்காக மாத்திரமே அரிசியினை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.அத்துடன் விவசாயிகளுக்கும்,மீனவர்களுக்கு மானியம் வழங்குவதற்கும்,  அரச உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement