• Apr 27 2024

இலங்கையில் இப்படியொரு கண்காட்சியா.. அசத்திய பாலர் பாடசாலை மாணவர்கள்! SamugamMedia

Chithra / Mar 12th 2023, 5:14 pm
image

Advertisement

புத்தளம் - பாலாவி, முல்லை ஸ்கீம் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் சிறுவர்  கண்காட்சி நிகழ்வொன்று நேற்றும் (11) இன்றும் (12) பாலர் பாடசாலை வளாகத்தில்  இடம்பெற்றது.

குறித்த பலர் பாடசாலை மாணவர்களிடையே ஆக்கத்திறன்களை மேலும் விருத்தி செய்து கொள்ளும் முகமாக இந்த இரண்டு நாள் கண்காட்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த வகையில் குறித்த மாணவர்களால் கழிவு பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தாமரைக் கோபுரம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் , தெஹிவலை மிருக காட்சிசாலை, துறைமுகம், சொகுசு வீடுகள்,  கட்டடங்கள் உட்பட பல வகையான கைப்பணிகளும், மாணவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான அனீஸ் ஜெரிஸா மற்றும் மசூத் மஸாஹிமா ஆகியோரினதும், பெற்றோர்களினதும்  ஏற்பாட்டில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சிறுவர் கண்காட்சியை பார்வையிட, உலமாக்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள் உட்பட பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தந்தனர்.

முற்றிலும் மாணவர்களின் ஆக்க திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பாலர் பாடசாலையின் ஆசிரியைகளுடைய வழிகாட்டலில், ஆனைத்து மாணவர்களும் தமது திறமைகளை மிகவும் சிறப்பான முறையில் வெளிகாட்டியிருந்தனர்.

குறித்த கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் இப்படியொரு கண்காட்சியா. அசத்திய பாலர் பாடசாலை மாணவர்கள் SamugamMedia புத்தளம் - பாலாவி, முல்லை ஸ்கீம் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் சிறுவர்  கண்காட்சி நிகழ்வொன்று நேற்றும் (11) இன்றும் (12) பாலர் பாடசாலை வளாகத்தில்  இடம்பெற்றது.குறித்த பலர் பாடசாலை மாணவர்களிடையே ஆக்கத்திறன்களை மேலும் விருத்தி செய்து கொள்ளும் முகமாக இந்த இரண்டு நாள் கண்காட்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.அந்த வகையில் குறித்த மாணவர்களால் கழிவு பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தாமரைக் கோபுரம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் , தெஹிவலை மிருக காட்சிசாலை, துறைமுகம், சொகுசு வீடுகள்,  கட்டடங்கள் உட்பட பல வகையான கைப்பணிகளும், மாணவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான அனீஸ் ஜெரிஸா மற்றும் மசூத் மஸாஹிமா ஆகியோரினதும், பெற்றோர்களினதும்  ஏற்பாட்டில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த சிறுவர் கண்காட்சியை பார்வையிட, உலமாக்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள் உட்பட பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தந்தனர்.முற்றிலும் மாணவர்களின் ஆக்க திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பாலர் பாடசாலையின் ஆசிரியைகளுடைய வழிகாட்டலில், ஆனைத்து மாணவர்களும் தமது திறமைகளை மிகவும் சிறப்பான முறையில் வெளிகாட்டியிருந்தனர்.குறித்த கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement