• Nov 28 2024

மழைக்கு மத்தியில் நாடாளாவிய ரீதியில் ஆரம்பமானது உயர்தரப் பரீட்சை

Chithra / Nov 25th 2024, 10:29 am
image


க.பொ.த. உயர்தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், மழைக்கு மத்தியிலும்  மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியார் தெரிவித்தார்.

வவுனியா

அந்தவகையில்  வவுனியா மாவட்டத்தில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு 2420 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன்,

அவர்களுக்காக 20 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 9 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து கடும் மழை பெய்து வருகின்றது. 

இதனால் பரீட்சை நிலையத்திற்கு வருகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழைக்கும் மத்தியிலும் இன்று காலை மாணவர்கள் ஆர்வத்துடன் கா.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி, கல்குடா ஆகிய கல்வி வலயங்களில் இன்றைய தினம் உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடுமையான மழைபெய்துவரும் நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு செல்வதை காணமுடிகின்றது.

இதேபோன்று வெள்ள அனர்த்த உள்ள பகுதிகளில் மாணவர்கள் பரீட்சைகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் அனர்த்த முகாமைவத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளிலிருந்து பரீட்சைக்கு பங்குகொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


 திருகோணமலை 

இதேவேளை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியில் திருகோணமலை மாவட்டத்தில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. 

திருகோணமலை மாவட்டத்தில் 6900 மாணவர்கள் பரீட்சைக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.

இவர்களுக்காக 46 பரீட்சை நிலையங்களில் இன்று பரீட்சைகள் ஆரம்பமாகின.    

வெள்ள அபாயத்தை எதிர் நோக்கக்கூடிய உயர்தர பரீட்சார்த்திகள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட பிரதேச செயலாளர்களினால், முன்கூட்டியே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கினங்க, போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்நோக்கிய மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.


மலையகம்


 மலையகத்திலும் மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை  அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியார் தெரிவித்தார்.

அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றனர்

பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.


யாழ்ப்பாணம்

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, யாழ்ப்பாண கல்லூரி மற்றும் விக்டோரியா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பெற்றுள்ள பரீட்சை நிலையங்களிலும் பரீட்சை ஆரம்பமாகியது. 

மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்துகொள்வதை அவதானிக்க முடிந்தது.

இன்றையதினம் ஆரம்பமான பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்தமுறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 32 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17 ஆயிரத்து 212 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

மழைக்கு மத்தியில் நாடாளாவிய ரீதியில் ஆரம்பமானது உயர்தரப் பரீட்சை க.பொ.த. உயர்தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், மழைக்கு மத்தியிலும்  மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியார் தெரிவித்தார்.வவுனியாஅந்தவகையில்  வவுனியா மாவட்டத்தில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு 2420 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன்,அவர்களுக்காக 20 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 9 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  இதேவேளை வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் பரீட்சை நிலையத்திற்கு வருகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழைக்கும் மத்தியிலும் இன்று காலை மாணவர்கள் ஆர்வத்துடன் கா.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி, கல்குடா ஆகிய கல்வி வலயங்களில் இன்றைய தினம் உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியது.மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடுமையான மழைபெய்துவரும் நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு செல்வதை காணமுடிகின்றது.இதேபோன்று வெள்ள அனர்த்த உள்ள பகுதிகளில் மாணவர்கள் பரீட்சைகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் அனர்த்த முகாமைவத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.அதேபோன்று வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளிலிருந்து பரீட்சைக்கு பங்குகொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  திருகோணமலை இதேவேளை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியில் திருகோணமலை மாவட்டத்தில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. திருகோணமலை மாவட்டத்தில் 6900 மாணவர்கள் பரீட்சைக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.இவர்களுக்காக 46 பரீட்சை நிலையங்களில் இன்று பரீட்சைகள் ஆரம்பமாகின.    வெள்ள அபாயத்தை எதிர் நோக்கக்கூடிய உயர்தர பரீட்சார்த்திகள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட பிரதேச செயலாளர்களினால், முன்கூட்டியே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.இதற்கினங்க, போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்நோக்கிய மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.மலையகம் மலையகத்திலும் மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை  அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியார் தெரிவித்தார்.அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றனர்பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.யாழ்ப்பாணம்வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, யாழ்ப்பாண கல்லூரி மற்றும் விக்டோரியா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பெற்றுள்ள பரீட்சை நிலையங்களிலும் பரீட்சை ஆரம்பமாகியது. மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்துகொள்வதை அவதானிக்க முடிந்தது.இன்றையதினம் ஆரம்பமான பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.இந்தமுறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 32 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17 ஆயிரத்து 212 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement