• Jan 26 2025

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு - பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2,561 பேர் கைது

Chithra / Jan 23rd 2025, 4:08 pm
image

 

நாடளாவிய ரீதியில் கடந்த 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 2,561 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 64,258 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 167 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 462 கிலோ கிராம் கஞ்சா, 15 கிலோ கிராம் ஹஸிஸ் போதைப்பொருள், 08 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு - பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2,561 பேர் கைது  நாடளாவிய ரீதியில் கடந்த 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது, நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 2,561 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 64,258 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 167 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அத்தோடு, சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 462 கிலோ கிராம் கஞ்சா, 15 கிலோ கிராம் ஹஸிஸ் போதைப்பொருள், 08 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement