• Nov 25 2024

இலங்கையிலிருந்து வெளியேறிய சுற்றுலா வந்திருந்த இஸ்ரேல் பிரஜைகள்

Chithra / Oct 24th 2024, 3:57 pm
image


இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 22 இஸ்ரேல் பிரஜைகள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினுடாக தமது நாட்டுக்கு சென்றுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள சுற்றுலா தனமான அறுகம்பை பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும், இஸ்ரேலிய அரசாங்கமும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதரகமும் அறிவித்ததை அடுத்து, இஸ்ரேலியர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமது நாட்டுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

குறித்த இஸ்ரேலிய பிரஜைகள் குழு இன்று அதிகாலை 03.03 மணியளவில் Fly Dubai விமானமான FZ-570 இல் விமானத்தில் டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலுக்கு திட்டமிடப்பட்ட விமானங்கள் இல்லாததால், இந்த இஸ்ரேலியர்கள் குழு டுபாய் சென்று அங்கிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் அல்லது ஜெருசலேம் ஆகிய விமான நிலையங்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.

இலங்கையிலிருந்து வெளியேறிய சுற்றுலா வந்திருந்த இஸ்ரேல் பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 22 இஸ்ரேல் பிரஜைகள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினுடாக தமது நாட்டுக்கு சென்றுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள சுற்றுலா தனமான அறுகம்பை பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும், இஸ்ரேலிய அரசாங்கமும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதரகமும் அறிவித்ததை அடுத்து, இஸ்ரேலியர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமது நாட்டுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.குறித்த இஸ்ரேலிய பிரஜைகள் குழு இன்று அதிகாலை 03.03 மணியளவில் Fly Dubai விமானமான FZ-570 இல் விமானத்தில் டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலுக்கு திட்டமிடப்பட்ட விமானங்கள் இல்லாததால், இந்த இஸ்ரேலியர்கள் குழு டுபாய் சென்று அங்கிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் அல்லது ஜெருசலேம் ஆகிய விமான நிலையங்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.

Advertisement

Advertisement

Advertisement