• Sep 19 2024

சிகரெட்டால் பாழான உங்க நுரையீரலை சரிசெய்ய இவற்றில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதுமாம்!

Tamil nila / Feb 4th 2023, 8:18 pm
image

Advertisement

புகைபிடித்தல் ஒரு ஆபத்தான தீயப்பழக்கம் என்பது அனைவரும் அறிந்ததுதான். சாதாரண பழக்கமாகத் தொடங்கும் இது நாளடைவில் உங்களை மாற்றக்கூடிய அபாயம் கொண்டது.

புகைபிடித்தல் புற்றுநோய் முதல் கடுமையான நுரையீரல் பிரச்சினைகள் வரை உங்கள் ஆரோக்கியத்தில் பல மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 


சிகரெட் புகைப்பவர்கள் ஏரோசல் துகள்கள் மற்றும் நிகோடின் கலந்த புகையிலையை சுவாசிக்கிறார்கள். இந்தக் கலவையானது நுரையீரலுக்குள் ஆழமாகச் செல்லும். இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகள் இரத்த ஓட்டத்தில் நுரையீரலால் உறிஞ்சப்படுகின்றன. 


இதனால் காலப்போக்கில் உங்கள் நுரையீரலின் சேதம் அதிகரிக்கிறது. புகைப்பழக்கத்தால் முதலில் மற்றும் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல்தான். புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை அறவே விட்டாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த சூழலில் சில உணவுகள் புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய உதவலாம். 


புகைபிடிப்பவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தக்காளி மற்றும் ஆப்பிள் அவர்களின் நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவும், நுரையீரல் சேதத்தை சரி செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 


ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஆப்பிள்கள் அல்லது தக்காளி சாப்பிடுபவர்களின் நுரையீரல் ஒரு தக்காளி மட்டும் சாப்பிட்டவர்களின் நுரையீரலை விட விரைவாக குணமடைவது ஆய்வில் கண்டறியப்பட்டது. 


க்ரீன் டீயில் கேடசின்கள் அதிக அளவில் உள்ளன, இது உடலில் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும். இது தக்காளி மற்றும் ஆப்பிளைப் போலவே வயதுக்கு ஏற்ப நுரையீரல் திறன் குறைவதையும், புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்தை குறைக்கவும் உதவுகிறது. 


கேடசின்கள் என்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், மூளையை நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும் கலவையாகும். க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் நுரையீரலில் உள்ள சளியை உடைத்து தளர்த்தும். கிரீன் டீயில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன, இது நுரையீரல் செயல்பாட்டையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. 


மஞ்சளில் சக்திவாய்ந்த சில அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது புகைபிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பைப் போக்க உதவுகிறது. இதற்கு காரணம் அதிலுள்ள குர்குமின் ஆகும், 


இது வலுவான ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது, இது நுரையீரலை நிகோடினால் ஏற்பட்ட சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. சிகரெட் புகையானது சுவாசப்பாதையில் வீக்கம் மற்றும் அடைப்பை ஏற்படுத்தும். COPD போன்ற நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோய்களின் வளர்ச்சியிலிருந்து குர்குமின் பாதுகாக்கிறது. 


இஞ்சியில் உடலுக்கு அத்தியாவசியத் தேவையான சில அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சுவாசக் குழாயிலிருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் இஞ்சியில் பொட்டாசியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. 


இஞ்சியின் சில சாறுகள் நுரையீரல் புற்றுநோய் செல்களைக் கொல்லும் என்றும் அறியப்படுகிறது.உங்களின் அன்றாட உணவுகளில் இஞ்சியை வெவ்வேறு வடிவங்களில் சேர்த்துக் கொள்ளலாம். 


புகைபிடித்தல் உள்ளுறுப்புகளை மட்டுமின்றி சரும ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். புகைபிடிப்பவர்கள் விரைவில் வயதான தோற்றத்தை அடைவதை நீங்கள் பார்க்கலாம். புகைபிடிப்பதை நிறுத்தியவர்கள் இழந்த சரும ஆரோக்கியத்தை மீண்டும் பெற தினமும் ஒரு டம்ளர் காய்கறி சாறு குடிக்க வேண்டும். கேரட் மற்றும் பீட்ரூட் சாறுகள் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.


சிகரெட்டால் பாழான உங்க நுரையீரலை சரிசெய்ய இவற்றில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதுமாம் புகைபிடித்தல் ஒரு ஆபத்தான தீயப்பழக்கம் என்பது அனைவரும் அறிந்ததுதான். சாதாரண பழக்கமாகத் தொடங்கும் இது நாளடைவில் உங்களை மாற்றக்கூடிய அபாயம் கொண்டது.புகைபிடித்தல் புற்றுநோய் முதல் கடுமையான நுரையீரல் பிரச்சினைகள் வரை உங்கள் ஆரோக்கியத்தில் பல மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சிகரெட் புகைப்பவர்கள் ஏரோசல் துகள்கள் மற்றும் நிகோடின் கலந்த புகையிலையை சுவாசிக்கிறார்கள். இந்தக் கலவையானது நுரையீரலுக்குள் ஆழமாகச் செல்லும். இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகள் இரத்த ஓட்டத்தில் நுரையீரலால் உறிஞ்சப்படுகின்றன. இதனால் காலப்போக்கில் உங்கள் நுரையீரலின் சேதம் அதிகரிக்கிறது. புகைப்பழக்கத்தால் முதலில் மற்றும் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல்தான். புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை அறவே விட்டாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த சூழலில் சில உணவுகள் புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய உதவலாம். புகைபிடிப்பவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தக்காளி மற்றும் ஆப்பிள் அவர்களின் நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவும், நுரையீரல் சேதத்தை சரி செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஆப்பிள்கள் அல்லது தக்காளி சாப்பிடுபவர்களின் நுரையீரல் ஒரு தக்காளி மட்டும் சாப்பிட்டவர்களின் நுரையீரலை விட விரைவாக குணமடைவது ஆய்வில் கண்டறியப்பட்டது. க்ரீன் டீயில் கேடசின்கள் அதிக அளவில் உள்ளன, இது உடலில் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும். இது தக்காளி மற்றும் ஆப்பிளைப் போலவே வயதுக்கு ஏற்ப நுரையீரல் திறன் குறைவதையும், புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்தை குறைக்கவும் உதவுகிறது. கேடசின்கள் என்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், மூளையை நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும் கலவையாகும். க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் நுரையீரலில் உள்ள சளியை உடைத்து தளர்த்தும். கிரீன் டீயில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன, இது நுரையீரல் செயல்பாட்டையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மஞ்சளில் சக்திவாய்ந்த சில அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது புகைபிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பைப் போக்க உதவுகிறது. இதற்கு காரணம் அதிலுள்ள குர்குமின் ஆகும், இது வலுவான ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது, இது நுரையீரலை நிகோடினால் ஏற்பட்ட சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. சிகரெட் புகையானது சுவாசப்பாதையில் வீக்கம் மற்றும் அடைப்பை ஏற்படுத்தும். COPD போன்ற நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோய்களின் வளர்ச்சியிலிருந்து குர்குமின் பாதுகாக்கிறது. இஞ்சியில் உடலுக்கு அத்தியாவசியத் தேவையான சில அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சுவாசக் குழாயிலிருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் இஞ்சியில் பொட்டாசியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இஞ்சியின் சில சாறுகள் நுரையீரல் புற்றுநோய் செல்களைக் கொல்லும் என்றும் அறியப்படுகிறது.உங்களின் அன்றாட உணவுகளில் இஞ்சியை வெவ்வேறு வடிவங்களில் சேர்த்துக் கொள்ளலாம். புகைபிடித்தல் உள்ளுறுப்புகளை மட்டுமின்றி சரும ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். புகைபிடிப்பவர்கள் விரைவில் வயதான தோற்றத்தை அடைவதை நீங்கள் பார்க்கலாம். புகைபிடிப்பதை நிறுத்தியவர்கள் இழந்த சரும ஆரோக்கியத்தை மீண்டும் பெற தினமும் ஒரு டம்ளர் காய்கறி சாறு குடிக்க வேண்டும். கேரட் மற்றும் பீட்ரூட் சாறுகள் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.

Advertisement

Advertisement

Advertisement