• Nov 26 2024

தெளிவாக விளங்கி படித்தாலே போதும் - பல இடங்களில் சாதிக்க முடியும் - கணிதப்பிரிவில் சாதனை படைத்த மாணவன் ஆலோசனை...!

Anaath / Jun 1st 2024, 5:12 pm
image

2023 ஆம் ஆண்டுக்கான  க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் முதலிடத்தை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47 வது நிலையை பெற்று தென்மராட்சி மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

தன்னிடம் சிறு வயது முதலே கணித பாடத்தில் தனக்கு ஆர்வம் இருந்ததாகவும் அதனடிப்படையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவினை தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயே தெரிவு  செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு தாய் தந்தை, மற்றும் ஆசிரியர்களுடைய பங்களிப்பும் உதவியும் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  தான் வீட்டில் படிப்பது குறைவு எனவும், தான் பாடங்களினை கல்வி நிலையங்களிலேயே விளங்கிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்பொழுது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் பல இடங்களுக்கு சென்று கல்வி பயில வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது ஒரு இடத்தில் கல்வி பயின்றாலும் அதனை விளங்கி கிரகித்து தெளிவாக விளங்கி படித்தால் அது போதுமானது. அனைவரும் சாதிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


தெளிவாக விளங்கி படித்தாலே போதும் - பல இடங்களில் சாதிக்க முடியும் - கணிதப்பிரிவில் சாதனை படைத்த மாணவன் ஆலோசனை. 2023 ஆம் ஆண்டுக்கான  க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் முதலிடத்தை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.குறித்த மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47 வது நிலையை பெற்று தென்மராட்சி மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தன்னிடம் சிறு வயது முதலே கணித பாடத்தில் தனக்கு ஆர்வம் இருந்ததாகவும் அதனடிப்படையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவினை தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயே தெரிவு  செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன் தனக்கு தாய் தந்தை, மற்றும் ஆசிரியர்களுடைய பங்களிப்பும் உதவியும் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும்  தான் வீட்டில் படிப்பது குறைவு எனவும், தான் பாடங்களினை கல்வி நிலையங்களிலேயே விளங்கிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்பொழுது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் பல இடங்களுக்கு சென்று கல்வி பயில வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது ஒரு இடத்தில் கல்வி பயின்றாலும் அதனை விளங்கி கிரகித்து தெளிவாக விளங்கி படித்தால் அது போதுமானது. அனைவரும் சாதிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement