• Nov 23 2024

வடமாகாண மக்களுக்கு பாரியளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்...! வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு...!

Sharmi / Mar 18th 2024, 3:11 pm
image

வடமாகாண மக்களுக்கு பாரியளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதற்கான தேவை காணப்படுவதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

வசதிகள் இல்லாத மாணவர்கள் பாடசாலை கல்வியை தவிர்த்து வருகின்றனர். வடக்கு மாகாணத்தில் கற்றல் வசதிகள் இல்லாதவர்களை அடையாளம் கண்டு ரோட்டரி கழகம் உதவ முன்வந்துள்ளது. 

இந்த செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, கல்வியால் முழு சமூக கட்டமைப்பையும் மாற்ற முடியும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் வட முனையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு பாரிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதற்கான தேவை உள்ளதாகவும், அதற்கான சிறிய செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.




வடமாகாண மக்களுக்கு பாரியளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு. வடமாகாண மக்களுக்கு பாரியளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதற்கான தேவை காணப்படுவதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்விடயத்தை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.வசதிகள் இல்லாத மாணவர்கள் பாடசாலை கல்வியை தவிர்த்து வருகின்றனர். வடக்கு மாகாணத்தில் கற்றல் வசதிகள் இல்லாதவர்களை அடையாளம் கண்டு ரோட்டரி கழகம் உதவ முன்வந்துள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, கல்வியால் முழு சமூக கட்டமைப்பையும் மாற்ற முடியும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.இதேவேளை, நாட்டின் வட முனையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு பாரிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதற்கான தேவை உள்ளதாகவும், அதற்கான சிறிய செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement